Friday, September 29, 2006

நேசக் கரம் - 01

ph_cover_GH_IMG0066

"அறஞ் செய விரும்பு" -
இயம்புகிறது சூடி !
சிந்திப்போம் இதனை
சிந்தனை கூடி !!

படிமிசை வாழும்
பல்லாயிரம் உயிர்க்கு
ஆப்பிரிக்கா தான்
வேர் !
அவ் வேர்க்கு
துயர் வரின்
ஆட்டம் காணாதா
உலகத் தேர் ?

மரபியல் உயிரியல்
அறிவியல் புவியியல்
செப்புவது யாது?
கொடுங்கள் காது..

அனைத்துக்கும் ஆதாரம்
ஆப்பிரிக்கா கண்டம் !
அறிந்ததா அதன் துயரை
பல நாள் வரை
அண்டம் ?

உணவுக்கு ஏங்கும்
வாய்கள் !
உயிரை வாங்கும்
நோய்கள் !!

ஒரு புறம் வறட்சி !
மறு புறம் புரட்சி !!
உலகோர் கண்களில்
மிரட்சி !!

Somalia
Sierra Leone
Sudan என
திரும்பிய இடமெங்கும்
கலகம் !!
மிரண்டது உலகம் !!

சமாதானப் பேச்சு
இறக்கையில்..
சுதந்திரத்தை காணமுடியுமா
சமாதானப் புறாவின்
இறக்கையில்?

-- தொடரும்

Friday, September 22, 2006

சினிமா - 08

சினிமா - 08

பரந்த உணர்வு வரின்
தர்காவிலும் தெரிவாள்
துர்கா !!

சிலுவை !
சேர்த்தும்
அழகு பார்க்கலாம்
கொலுவை !!

"சண்டியரை"
விருமாண்டி ஆக்கியது
நொடிக்கொரு தரம்
அவ் வழக்கு கண்ட
நிலுவை !!
சாதி இன மொழி
கடந்த தமிழ் படங்கள்
அடையும்
உச்சக் கட்ட
வலுவை !!

அடங்க வேண்டும்
அத்து மீறி எழுதுவோரது
கொட்டம் !!
அதற்காகவாவது
தமிழக அரசு நிறுவவேண்டும்
சட்டம் !!

மத இன சாதி
இல்லாமல் எழுதுவதே
முறை !
மீறினால் சிறை !!

என்னைச் சிலர்
எள்ளலாம் !!
இது எழுத்துச் சுதந்திரத்தை
அடக்கும் திட்டம் எனக்
கொள்ளலாம் !!

A.G. Gardiner
எனும் ஆங்கில எழுத்தாளர்
எழுதினார்
இதற்கு விடை !
"பலரது சுதந்திரம் காக்க
சிலரது சுதந்திரத்துக்கு
வைக்கலாம் தடை" !!

U/A எனும்
ஆதி காலத்து
மதிப்பீடுகளை
களையுங்கள் !!
மேலை நாடுகள் போல்
படத்திற்கு ஏற்ப
G, PG, PG-13, R, NC17, MA
என புதிய
மதிப்பீடுகளை
விளையுங்கள் !!

சுதந்திரம் அமெரிக்கர்களுக்கு
பிரதானம் !!
ஆயினும் அவர்களிடமுண்டு
வெறியைத் தூண்டும்
படம் எடுக்கலாகாது எனும்
நிதானம் !!

மதமும் இனமும்
தமிழ்ப் பாடல்களில் இருத்தல்
தகாது !!
இருப்பின்
தமிழ்த் திரையின் பெருமை
மிகாது !!

இனியும் பொறுத்தல்
ஆகாது !
குற்றச் சாட்டுகளை
கேட்க வேண்டும் கலைஞர்
காது !!

-- முற்றும்

சினிமா - 07

ஒப்புமைக்காக இஸ்லாமிய
பிரிவுகளை சொன்னேன் !
சாதிகளை வைத்து
ஒரு போதும் கவிதை
பின்னேன் !!

நான் மதச் சார்பாற்றவன் !!
காழ்ப்புணர்ச்சி அற்றவன் !!
எம் மதமும் சம்மதம்
எனும்
ஏகாந்த அறிவைப் பெற்றவன் !!
நல்லிணக்கமே
நாட்டின் உயிர் நாடி
எனக் கற்றவன் !!

பாட்டுக்கு அழகு
பதம் !!
நாட்டுக்கு அழகு
மதம் !!

முதலாவதை கட்டுவது
சுரங்கள் !!
இரண்டாவதை கட்டுவது
கரங்கள் !!

பதம் பதமாக
பாட்டைப் பிரித்து
அறியலாம் !!
மதம் மதமாக
நாட்டைப் பிரித்தால்
நாடே
முறியலாம் !!

இதை உணரின்
நிதம் இதம் !
உணராததால் தான்
நிதம் வதம் !!

பாடல்களுக்கும் வேண்டும்
இவ் விதிமுறை !!
கிளர்ந்தெழட்டும் புதிய
தலைமுறை !!
உலகமே உவந்து பார்க்கும்
இந்தியப் படங்களை
முதல் முறை !!

தமிழ்ப் படம்
அன்று ஏறும்
புகழென்னும் ரதம் !
காணும் சதம் !!

-- தொடரும்

சினிமா - 06

வேறு
என்ன சொல்ல?
பாடல்களில் இருப்பது
சுவை அல்ல !
ஆயினும் என்னை
உறுத்துபவை
வருத்துபவை
இவை அல்ல !

பாரதி எழுதினான்
சாதிகள் இல்லையடி பாப்பா !
இற்றை நாள் கவிஞர்
போட்டனர் இக் கருத்துக்கு
தாழ்ப்பா(ள்) !!

"ஐயர் வந்து சொல்லும்
கீதையில் தான்
வார்த்தை வருமா ?"

"ஐயங்கார் வீட்டு அழகே "

"அவளுக்கென்ன
அம்பாசமுத்திரம் ஐயர்
ஹோட்டல் ஹல்வா மாதிரி "

இவற்றை அனுமதித்தது
தணிக்கைக் குழுவா?
அதன் தலையில் என்ன
புழுவா?

எழுத முடியுமா இவர்களால்
"ஷியா வீட்டு சாயாவே
என் பிள்ளைக்கு எப்போ
தாயாவே?
கொடு எனக்கு
right of way !
ஏங்குறேன் உனக்காக
night or day "!!
என்று?

அல்லது
"சுன்னி வீட்டு கன்னியே
வாசம் வீசும் வன்னியே
கண்ணாலே பேசிக் கொன்னியே
வறண்டு போச்சு மென்னியே
தெருக்கோடிக்கு வரச் சொன்னியே
நாளை என் தம்பிக்கு அண்ணியே"
என்று ?

எழுதின்
அனுப்பிடுவர் பரலோகம்
குண்டு போட்டுக்
கொன்று !
அல்லது
தின்று விடுவார்கள் இவர்கள்
முதுகெலும்பை
மென்று !!

-- தொடரும்

Wednesday, September 20, 2006

சினிமா - 05

கவிதையின் அழகு
சொற்கள் !!
இக்கால பாடல்களை கேட்டால்
நற நறக்கின்றன
பற்கள் !!
கை தேடுகின்றன
கற்கள் !!

வார்த்தைக் கோர்வை !
இற்றை நாள் பாடல்கள்
தருகின்றன கேட்போர்க்கு
சோர்வை !!

கா கா கா
அந்தக் காலம் !!
தரலேன்னா உன் பேச்சு கா !
இந்தக் காலம் !!

கண்ணாலே பேசி பேசி
கொல்லாதே - அந்தக் காலம்
அப்படிப் போடு போடு போடு
அசத்திப் போடு கண்ணாலே
- இந்தக் காலம்!!

தமிழ் சினிமாவுக்கு
இவை தருகின்றன
நாளும் துயரம் !
என்னணம் நாம்
எதிர்பார்க்கலாம்
ஆஸ்கார் உயரம் ?

அமைதியைக் கெடுக்கும்
அசுர வேகம்
இற்றை நாள் பாடலில்
ஏகம் ஏகம் !!

இருக்கிறது அனைவருக்கும்
இனிமையான இசை கேட்கும்
ஆசை !
தயாரிப்பாளர் எதிர்பார்க்கிறார்
அளவிட முடியா
காசை !!

முடிவு?
செவிப்பறை கிழியும் அளவிற்கு
நவீன வாத்தியங்களின்
ஓசை !!

மொத்தத்தில்
no melody !
only malady !!

-- தொடரும்

Friday, September 15, 2006

கடமை

nooyi
மண்மிசை வாழும்
மானிடர்
படிப்பின்றி காணலாமோ
இடர்?
பயின்றால் அன்றோ
ஒளிரும்
அறிவுச் சுடர்?

மானுடம்
பயிலாதிருப்பது மடமை !
அம் மடமை போக்குவது
நம் கடமை !!

ஏரார்ந்த இக் கருத்தை
ஆதி நாள் தொட்டே
ஆரத் தழுவிய கல்லூரிகளில்
உண்டு
சென்னை கிறித்துவக் கல்லூரிக்கு
முதலிடம் !
அது அறியாமை எனும்
இருள் நீக்கும்
அகலிடம் !!

சுந்தர்ஜி, கரியப்பா
சேஷன் என
அக் கல்லூரியில்
பயின்றோர் பட்டியல்
பல தூரத்துக்கு
நீளும் !!
பாராட்டில்
தட்டித் தட்டியே
சிவந்திருக்கிறது
இதனில் படித்த பலரது
தோளும் !!

ஆம் அன்பர்களே !!
அக் கல்லூரி தான்
இந்திய நாட்டை
பெருமைப் படச் செய்த
பலரின்
படிப்புக்கு
புகலிடம் !!
இன்று...
உலகமே வியக்கிறது
அது பயிற்றுவித்த
ஒரு மகளிடம் !!

ஆம்
இப் பெருமைக்கெல்லாம்
மெருகு சேர்க்க
செருகப் பெற்ற
மயிற் பீலி
இந்திரா நூயி !
தமிழ்த் திருநாட்டில்
திருமகள் இவளை
தந்தருளியதற்கு
நாம் வணங்குவோம்
சேஷ சாயி !!

பெப்சியின்
தலை மகளே !!
எத் தடையும் உன் முன்
ஆகட்டும் துகளே !!
ஓங்கட்டும் உன் புகழே !!

இந்தியர் நாவில்
நாளும் உன் பெயர் !
களைவாயா நீயாவது
எங்கள் துயர்?

மேற்கு
மேலும் மேலும்
மேலோங்குகிறது !!
கிழக்கில் எந்நாளும்
வேல் ஓங்குகிறது !!

யாரை வைய?
என் செய்ய?

விடியும் போதே
சிவந்து விடுகிறது
கிழக்கு !!
அதை உலுக்குகிறது
பெப்சி நல்லதா கெட்டதா
எனும்
நாட்பட்ட வழக்கு !!

திரும்பட்டும் உனது பார்வை
இந்தியா பக்கம் !!
தீரட்டும் பெப்சியில்
பூச்சி கொல்லி உள்ளதா
எனும்
தர்க்கம் !!

Thursday, September 14, 2006

சினிமா - 04

ஏறியது நச்சு
காலப் போக்கில்
கவிஞர் நாக்கில் !!
கிடக்கிறது தமிழ்த் திரையுலகம்
பள்ளத் தாக்கில் !!

வாத்ஸ்யாயனரே
வாயை மூடும் அளவுக்கு
காமக் கலவை !!
நாளும் விடலைகளுக்கு
செய்கின்றன அவை
மூளைச் சலவை !!

தமிழக அரசின்
கர்ச்சனை..
கோயில்களில் இனி
தமிழில் தான்
அர்ச்சனை !!

திரைப் பாடல்களுக்கு
இவ் விதி
ஏன் தளர்ந்தது?
தமிழ் பாடல்களில்
பிற மொழி ஆதிக்கம்
ஏன் வளர்ந்தது?

முஸ்தபா முஸ்தபா
Dont worry முஸ்தபா !
Day by day
Day by day
வாழ்க்கைப் பயணம்
Day by day

ஷக்கலக்க Baby
ஷக்கலக்க Baby
Look விட தோணலையா?

தூக்கத்தில் துரத்தும்
Dragon Remo!!
ரம்பைகள் Heartல்
Ringtone Remo !

தில்பர் ஜானே
தில் தீவானே
தித்திக்கற தேனே !!

மாஜா மாஜா மாஜா
மாஜா மாஜா !

பாடலுக்குப் பாடல்
பிற மொழி வார்த்தைகளின்
தாக்கம் !!
குழம்பிக் கிடக்கிறது
கோடம்பாக்கம் !!

வாலிக்கும் இதில்
பங்குண்டு !
எழுதியிருக்கிறார் தன்
சுயசரிதையில்
"அது எனக்கு எறியப்பட்ட
எலும்புத் துண்டு !"

-- தொடரும்

சினிமா - 03

கவிதையின் தரம்
சமூகத்திற்கு நாமிடும்
உரம்

கரம் - அது கை
தட்டவும் செய்யும் ! - சிரம்
குட்டவும் செய்யும் !!

இதனை உணர்ந்து
பாடல் எழுதியவர் பலர் !
அவர்கள் காலத்திய
தமிழ் சினிமா பாடல்கள்
வாடா மலர் !!

பட்டுக் கோட்டை !
அவர் பாடல்களில்
காண முடியுமோ
ஓட்டை ?

"ஆடை கட்டி வந்த நிலவோ"
போதும் !
மயங்கி விடுவாள் எம்
மாதும் !
கேட்காது பிற பாடல் எவர்
காதும் !!

மருதகாசி !
வாலியும் இவர் பாடலின்
விசுவாசி !!

"வண்ணத் தமிழ் பெண்ணோருத்தி
என்னருகில் வந்தாள்"
அப்பாடலை கேட்குந்தோறும்
தேடலாம் அவரது
செந் தாள் !!

இவ்வண்ணம்
கவர்ந்திழுக்கும் பாடல்கள்
கொண்ட படம்
மக்களை வென்றது !!
இப்படி பல காலம்
சென்றது !!

-- தொடரும்

சினிமா - 02

திரைப் பாடல்கள் பலருக்கு
கிரியா ஊக்கி !!
சாதித்திருக்கின்றனர் பலர்
அவை தாக்கி !!

இது நிஜம் !
வெற்றி பெற்றோரது
பட்டியல் போட்டால்
தாண்டும் பல
கஜம் !!

வாய்ப்புத் தேடித் தேடி
சலித்து..
வாசற்படி ஏறி ஏறி கால்
வலித்து..

நாட்கள் வாரமாக..
குடும்பம் பாரமாக...

வீண் முயற்சியை
மறந்து விடு !
அயர்ச்சியை துறந்து விடு !
பம்பாய்க்கு பறந்து விடு !!

என நாளும்...
கேலியை சந்தித்த
வாலியை
இழுத்து நிறுத்திய பாடல்
கண்ணதாசனின்
"மயக்கமா? கலக்கமா ?"

அப்பாடல் வாலியை
தேற்றியது !
தடம் மாற்றியது !
கரை ஏற்றியது !!
தமிழ் சினிமா
தரமான ஒரு கவிஞனை
நாளும் போற்றியது !!

நம்மை நாம்
நம்பினால்
நம்மாலும் முடியும் !
உட்காரும்
உலகோர் நாவில்
நம் பாடல்
அடியும் !!

இரு ! பார் !
இருப்பார்
இத்தொழிலில்
இவ்விரண்டும்
இருப்பார் !

இக் கருத்துக்களை
அப் பாடலின்
ஊடகமாக கொண்டு
காற்றையே பல நாள்
உண்டு...

சாதித்தவர் என்
குருநாதர் !!
தமிழ்த் திரைப்படப் பாடல்களின்
இற்றை நாள்
God Father !!

அவரது சுயசரிதை புத்தகம்
"நானும் இந்த நூற்றாண்டும்" !
நாளும் படிக்க வேண்டும்
இதனை வாண்டும் !!

-- தொடரும்

Monday, September 11, 2006

சினிமா - 01

இது சினிமா குறித்த
காதை !
சிறிது கொடுங்கள் இதற்கு
காதை !!

இந்தியனுக்கு முதன்மையானது
தன் நாட்டின்
வரை படம் !
அவனது அடுத்த காதல்
திரைப்படம் !!

படப்பிடிப்பு
பத்திரிகை தொடர்பு
ஒளிப்பதிவு
ஒப்பனை
வசனம்
வடிவமைப்பு
வர்த்தகம்....

என ஒரு படத்திற்குண்டு
பல முகம் !
அப் பலவும் நன்று அமையின்
அப் படம் தரும்
பல சுகம் !!
அப் படத்தை போற்றும்
சகம் !!
படத்தைப் பற்றிப் பேசுங்கால்
பர பரப்பில் பறி போகும்
நகம் !!

இவ்வத்தனை முகங்களுக்கும்
பிரதானமானது
இசை !
அது தான் நேயர்களை
திரையரங்கில் கட்டிப் போடும்
பசை !!

ஆம்....
நமது திரைப்படங்களின்
தனித்துவம்
ஆடல் பாடலில் !
அப் பாடல் பலருக்கு
உதவியும் இருக்கிறது
வாழ்க்கைத் தேடலில் !!

-- தொடரும்

Friday, September 08, 2006

நிஜம். . . .

நிஜம்..
சொல்லின்
வலிக்கவா செய்யும்
புஜம்?

World is flat
இப் புத்தகம்
செய்திருக்கிறது விற்பனையில்
பர பரப்பு !!
படிக்கப் படிக்க என்
தொண்டையில்
கர கரப்பு !!

எழுதியிருப்பவர்
Thomas Friedman !
இன்றைய தேதியில்
உலகமயமாக்கல் பற்றி
எழுதுவதற்கு
He is the man !

புத்தகம்..
படு சுவையானது !!
ஆழ்ந்து படிக்க வேண்டும்
இதனை தமிழக
அவையானது !!

முன்னேற்ற இந்தியாவின்
உதாரணம் !
கடினமான தொழிலும் இவர்கட்கு
சாதாரணம் !!

தென்னகத்தின் Silicon Valley !
இந்தியாவின்
தகவல் தொழில்நுட்ப
தலைநகரம் !!

என பெங்களூர்
போற்றப் பட்டிருக்கிறது !!
ஏற்றப் பட்டிருக்கிறது !
நம் ஊர் மானமோ
கப்பல்
ஏற்றப் பட்டிருக்கிறது !!

விண்ணுக்கு நீள்கிறது
பெங்களூரின்
பெருமை குறித்த
வெண்பா !
கேட்டும் நாம்
சும்மா இருத்தல்
பண்பா ?

விழுகிறது அதன் கழுத்தில்
பற்பல புகழ்
ஆரம் !
என் கண்ணில் தோன்றுகிறது
ஈரம் !!

அகிலமே அவ்வூரை
நாடுகிறது !!
அனுதினமும் அதன் புகழ்
கூடுகிறது !
முன்னேற்ற நடை
போடுகிறது !!
அடுத்த சந்தர்ப்பத்தை
தேடுகிறது !!

என் நகரம்
சென்னை !
அது விட்டு வைக்குமா
இச் செய்தி கேட்டு
என்னை ?!

என் முகமும் மனமும்
வாடுகிறது !!
"பருவத்தே பயிர் செய்"
படித்தால் போதுமா?
பழக வேண்டாமா? என
சாடுகிறது !!

இந்தியனாய் பெங்களூர்
குறித்து எனக்கு
பெருமை !!
தென்னிந்தியனாய்
சென்னையை
நினைக்கில் ஏற்படுகிறது
வெறுமை !!

எங்கு தோற்றோம்
நாம் ?
ஏன் நம்மை
நாடுவதில்லை
.Com?

Calcutta - cultural capital
Bombay - Business capital
Delhi - Political capital
Madras - Intellectual capital

என் நகரத்திற்கு
இருந்தது இப் பெருமை
ஒரு காலத்தில் !
இன்று கிடக்கிறது
அலங்கோலத்தில் !!

ஊட்டி, கொடைக்கானல்
என
மலைத் தடங்கள் !
சிதம்பரம் நாட்டியாஞ்சலி
மாமல்லபுரம் சிற்பங்கள்
என
கலை இடங்கள் !!

வருடந்தோறும் மார்கழியில்
சங்கீத சக்கரவர்த்திகளின்
இசை விழா !!
கேட்டு மயங்கினால்
நம் காதில் பிற
இசை விழா !!

Marina Beach!
துயரமான மனதையும்
வெளுக்கச் செய்யும்
Bleach !!

Deerக்கு முதுமலை !
Seerக்கு காஞ்சி !!
Beerக்கு பாண்டிச்சேரி !!

என்ன இல்லை
தமிழகத்தில் !!
பிறகு ஏனிருக்கிறோம்
தேக்கத்தில் !!

தலைவர்கள் தேடுவது
தன் பொருள் !
நமக்குத் தேவை
மென் பொருள் !!

பல நூறு அடி
சதுரப் பரப்பில்
Nokia, Ford, Hyundai
கொண்டு வருபவை
கன ரக தொழிற்சாலைகள் !
தமிழகத்தில்
இன்றைய தேதியில்
இவர்களுக்குத் தான்
தோண்டப்படுகின்றன
சாலைகள் !!

நமக்கு வேண்டியது
வன்பொருள் அல்ல
மென் பொருள் !!
அன்பு கூர்ந்து
அதனை
தந்தருள் !!

சொல்கின்றனர் நமதூர்
காளைகள் !!
அக் காளைகள்
கப்பலேறிப்போனால்
பல பெற்றோரின்
நாளை கள் !!

மாறன் என் செய்வார்
மத்தியில் ?!
ஆளும் அரசுக்கு
புத்தி இல் !!

"இனி வரும் சந்தர்ப்பத்தை
இழக்க விடாதே"
என அறிவு
ஏற்றப் பட வேண்டும் அதன்
புத்தியில் !!
இல்லையேல் தமிழகத்தில்
வேலையில்லாத் திண்டாட்டம்
முடியும்
கத்தியில் !!