Thursday, March 30, 2006

நிலம் - 06

ஐவகை நிலத்தில்
உவகை பொங்க
நான்கை
நிலம் கொண்டது !!
மீந்த ஒன்றை
ஜலம் கொண்டது !!

நிலம்....
அதன் ஜன்மப் பகை
உப்பு ஜலம் !!

அவ்விரண்டும் ஒன்றா !!
பிறகு எங்ஙனம் ஆகும்
ஒன்றா ?

இரண்டும் இரண்டற
தழுவாது !!
தன் விதியினின்று
வழுவாது !!
நழுவாது !!

காரணம்
அவ்விரண்டுக்கும் ஒவ்வாது !!
ஒவ்வாததைக் கவ்வாது !!
கவ்வினால் எங்ஙனம்
உருவாகும் ஜவ்வாது ?!

-- தொடரும்

நிலம் - 05

பாண்டவன் ஐந்து !!
காகுத்தன் ஆனான்
"குகனொடும் ஐந்து" !!

நமசிவாய எனும்
அட்சரம் ஐந்து !!
ஆனைமுகனின் கரம்
ஐந்து !!

அவதாரத்தில்
ஆண்டவன் ஈரைந்து !!

இது போலவே
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
பாலை என
நிலம் ஐந்து !!

நிலத்துக்கு பெயராக அமைந்த
ஐந்தினை
ஐந்திணைக்கும்
சொல்வர் !!

புணர்தல்
இருத்தல்
ஊடல்
இரங்கல்
பிரிதல் என
அவ் ஐந்திணைக்குரிய
உரிப்பொருள் ஐந்து !!

ஐந்து இத்தனை !!
ஆஹா! தமிழின்
அழகு எத்தனை !!

வைத்திடுவீர் வண்டமிழை
அகத்தினை!
ஆகிடுவீர் தமிழ்ச்
செல்வர் !!
ஆகின்
உமது பேச்சு கேட்க பலர்
செல்வர் !!

-- தொடரும்

Tuesday, March 28, 2006

What raaga is the song Rahasiyamanathu kathal

I normally dont write posts in English, neither do I welcome comments for my posts..

this one is different

My wife and I are engaged in a healthy debate over a music issue. If I win, I get nice Idlis + Carrot Halwa this forthcoming Sunday April/2/2006.

If she wins, I have to look out for some jewelry as well as finding someone who will stitch my wallet since forking money for that jewelry would invariably tear my wallet.

Anyway -- What is the Raagam for the song "Ragasiyamaanathu kaathal" in the film Kodambakkam. More importantly, whatever the Raagam you identify the song to be in, is the song 100% in the raagam (or) does it vacillate?

In order to not cloud your thinking, I am not giving what we are thinking it to be (INAM -- HDAM -- TAHW)

Monday, March 27, 2006

நிலம் - 04

பொன்
வெள்ளி
செம்பு
இரும்பு
ஈயம் என
உலோகங்கள் ஐந்து !!

சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
வளையாபதி
குண்டலகேசி என
பெருங்காப்பியம் ஐந்து !!

நரம்பு
தசை
தோல்
குருதி
எலும்பு என
உடற் பொருள் ஐந்து !!

துளைக் கருவி - குழல்
தோல் கருவி - மத்தளம்
நரம்புக் கருவி - யாழ்
கஞ்சக் கருவி - ஜால்ரா
மிடற்றுக் கருவி - வாய்ப்பாட்டு
என
இசைக் கருவி ஐந்து !!

அகல்யை
திரொளபதி
தாரை
சீதை
மண்டோதரீ என
கன்னியர் ஐந்து !!

-- தொடரும்

நிலம் - 03

கொலை
பொய்
களவு
கள்ளுண்ணுதல்
குரு இகழ்ச்சி என
பாதகம் ஐந்து !!

மெய்
வாய்
கண்
மூக்கு
செவி என
பொறி ஐந்து !!

விழுமுதல்
வரவு
செலவு
இருப்பு
ஆதாயம் என
தொகை ஐந்து !!

நக்கல்
பருகல்
கடித்தல்
மெல்லல்
விழுங்கல் என
உணவு ஐந்து !!

மந்திரியர்
புரோகிதர்
சேனாதிபதியர்
சாரணர்
தூதுவர் என
குழு ஐந்து !!

-- தொடரும்

Friday, March 24, 2006

நிலம் - 02

பேசுகிறான் வாலிதாசன்
கவிதை புனைந்து !!
தமிழ் மழையில்
சிறிது நனைந்து !!

போவீர் அதில்
சிறிது புதைந்து !!
போனால் போகமாட்டீர்
புத்தி சிதைந்து !!

எழுத்து
சொல்
பொருள்
யாப்பு
அணி என
இலக்கணம் ஐந்து !!

நிலம்
நீர்
நெருப்பு
காற்று
வெளி என
பூதம் ஐந்து !!

வெண்பா
கலிப்பா
ஆசிரியப்பா
வஞ்சிப்பா
மருட்பா என
பா ஐந்து !!

ஆண்பால்
பெண்பால்
பலர் பால்
ஒன்றன் பால்
பலவின் பால் என
பால் ஐந்து !!

-- தொடரும்

நிலம் - 01

சமஸ்கிருதத்தில்
ஐந்துக்கு "பஞ்சம்" !!
தமிழில் ஐந்துக்கா
பஞ்சம் ?!

ஆம்...
தமிழில் உண்டு
பல ஐந்து !!
அதனால் அது போகவில்லை
நைந்து !!

உயிரும் மெய்யும்
சேரும் இழைந்து !!
உருவாகும் உயர் சொல்லால்
தமிழ் கொஞ்சும்
குழைந்து !!

ஆகவே
எம்மொழி முன்னும்
ஆகவில்லை தமிழ்
தலை தழைந்து !!

சொல்ல வந்தேன்
தமிழ் அழகை
கொஞ்சம் விழைந்து !!
சிந்தனை கிடக்கட்டும்
சிறிது அதனுள் நுழைந்து !!

-- தொடரும்

Friday, March 17, 2006

பட்டம் - 07

jpg0003

2006....

கையுறையையும் அறுக்கும்
திண்மையான
Polyester கயிறு !!

Fiber Glassல்
செய்த நரம்பு !!
Nylon உடம்பு !!

நூல் சுற்ற ஏதுவாக
Oak எனும்
வெண் கடம்ப வகை
மரத்தில் செய்த
நூல் சுற்றி !!

காற்றுக்கு குறைவில்லை !!
தெளிவான வானம்
மழையில்லை !!

வாகன நெரிசலில்லை !!
"ஆறுக்கு வந்துடு !" என
அம்மாவின்
அரிப்பில்லை !

நூலில் முடிச்சோ
சிக்கலோ இல்லை !!
எவன் அறுப்பானோ
எனும் பயமுமில்லை !!

அறுந்து விடும்
தரமுமில்லை !!
அகப்பட
மரமுமில்லை !!

எவ்வளவு இருந்து
என்ன ?
என்ன பறந்து
என்ன ?

பழையதை மறக்க
முடியவில்லை !
புதுப் பட்டம் மனதில்
படியவில்லை !!

கொடி கட்டிப் பறந்தும்
கொண்டாட
இனமில்லை !
ஆகவே
மனமில்லை !!

மொத்தத்தில் அன்று..
கை "வலித்தது" !
இன்று..
மனமன்றோ வலித்தது ?!

Monday, March 13, 2006

பட்டம் - 06

jpg0005


கீழே முள்
செடிடா !!
பட்டத்தை தூக்கிப்
பிடிடா !!

14 ஒன்று
8க்கு
இடும் ஆணை !!
அவன் நினைப்பு..
என் வட்டாரத்தில்
என்னை மிஞ்ச
காண முடியுமோ வேறோர்
ஆணை ?!

ஜிவ்வென ஏறும்
பட்டம் !
வானம் தான்
விட்டம் !
காற்று வைத்தது தான்
சட்டம் !!
வால் இருந்தால் அடிக்காது
வட்டம் !!

பட்டத்தில் போட்டிக்கு பெயர்
Deal !!
ஜெயிப்பவனுக்கு கிடைக்கும்
"ஜகதலப் பிரதாபன்" எனும்
Seal !!
இச் Sealக்கும் Dealக்கும்
நாங்கள் இழந்திருக்கிறோம்
பல மதிய
Meal !!

அறுந்த பட்டம்
பிடிப்பவனுக்கு சொந்தம் !!
அறுத்தவன் மினுமினுப்பான்
ஆதியோடு அந்தம் !!

எஞ்சி இருப்பவையில் சில
மின் கம்பியிலோ
தென்னை மரத்திலோ
சிக்கும் !!
அதன் எஜமானனுக்கு
தொண்டை விக்கும் !!
மனம் பரிதவிக்கும் !!

வார்த்தை வராது வாய்
திக்கும் !!
எவனாவது
எடுக்க மாட்டானா என
கண் தேடும் எட்டுத்
திக்கும் !!

ராமப்ரியாவில்
பட்டத்தில் சூரன்..
பகைவனுக்கு வில்லன்...
செயற்கைப் பல்லன்..
ஸ்ரீராமன் எனும்
கள்ளன்...

-- தொடரும்

பட்டம் - 05

jpg0005


ஏரி மிக
நீட்டம் !!
எதிரில் பானுமதியின்
தோட்டம் !!

ஏரியின் பூமி
வறண்டு கிடக்கும் !!

மேரி!
சாரி! என
பல வகை
சாதி சார்ந்த ஆசாமி
ஏரிக்குள்
திரண்டு கிடக்கும்!!

மாஞ்சா நூலுக்கு
பிளாஸ்திரி கைத் தோலுக்கு
என
மாலை நாலுக்கு
ஆரம்பமாகும் ஆட்டம் !
ஆர்ப்பரிக்கும் கூட்டம் !!

அறுத்துருவியோ ?
சிறுத்துருவியோ ?
"சடை" பட்டம் உன்னோடது ! -
மறுத்துருவியோ ?

வார்த்தை பறக்கும் !!
நரம்பில் ஏறிய கோபத்தை
நாக்கு இறக்கும் !!

-- தொடரும்

Thursday, March 09, 2006

பட்டம் - 04

P1243327


வால் இல்லா
பட்டத்துக்கு பெயர்
பாணா !
அவ் வகைப் பட்டம்
மற்றவை முன்
நாணா !!

காற்று பலமாக இருப்பினும்
அதன்
முதுகு கோணா !!
தன் இனம் தவிர
மற்றையதை அவை
பேணா !!

ஒரு முறை
ஏற்றிப் பார்த்தால்
உள்ளம் கிறங்கி
பிற ஒன்றை
கண்கள் காணா !!
மறந்தும் மற்றையதை
வாங்கத் தோணா !!

வீட்டெதிரில் ஏரி !!
சனி தோறும்
அங்கு கூடும்
ஒத்து மொத்த
சேரி !!

கேட்கவா வேண்டும் !
முகத்தில் பூக்கும்
பூரி !!
தொண்டையில்
இறங்காது பூரி !!

-- தொடரும்

பட்டம் - 03

P1243314

பட்டமோ
நூலோ வாங்க
தாண்ட வேண்டும்
தண்டவாளம் !!
அம்மா போடுவாள்
கடிவாளம் !!

விட மாட்டேன் உன்னை !!
விட்டால் பிறகு நான்
என்ன அன்னை ?!

புகை கக்கும் வண்டி
மனத் திரையில்
படப் பட
அடிக்கிறது மனம்
பட பட !!

எங்கேனும் போய்
நீ தொலைந்தால்
இடம் தெரியாது
அலைந்தால்..

எங்கென்று போய்
நான் தேட?
ஆகவே தான் கேட்கிறேன்
எவர் வருகிறார்
உன் கூட ?

வந்தால் நட !
தண்டவாளம் கட !!
வராவிட்டால் பேசாமல்
கிட !!

மனம் அவள் பேச்சை
மறுக்கும் !
அந்த அளவு
ஏறிக் கிடக்கும்
கிறுக்கும் !!

சமாளித்து சமாளித்து
நடப்போம் நாங்கள் மணவாளன்
கடைக்கு !!
அப்பாவும் அங்கு போவார்
சுக்குக் காபி,
வடைக்கு !!

-- தொடரும்

Monday, March 06, 2006

பட்டம் - 02

P1243307

ஈர்க்கு
அல்லது
மூங்கில் பிரம்பில்
நரம்பு...

வண்ணத் தாள்
அல்லது
செய்தித் தாளில்
உடம்பு...

சூத்திரம்..
நூல்..

இந்த நாலும்
சரியாக இருந்தால் ஏறும்
பட்டம் !
இல்லாவிடில்
படுத்துவிடும் தரை
மட்டம் !!

40 பைசாவுக்கு
காண்டாமிருகம் !!
4 ரூபாய்க்கு
சங்கிலி !!

அற்றை நாளில்
இவை தாம்
நூல்கள் !!
வாங்கப் பறக்கும்
எம் கால்கள் !!

சங்கிலி..
பகைவனுக்கு தரும்
கிலி !!
நமக்கு வரும்
கெலி !!

எமக்கு உண்டு
இந்த ஆட்டத்தில்
தீரா போதை !!
பெருங்களத்தூரில்
அன்று உண்டு
ஒத்தை ரயில் பாதை !!

-- தொடரும்

பட்டம் - 01

jpg0001

1985....

13 வயது தொடங்கிய
கால கட்டம்..
பயமறியா
இளவட்டம்..
கையில் கட்டாயம்
இருக்கும் பட்டம் !!

மேக மூட்டம்
மழை பாட்டம்
உண்டு பண்ணும்
இளசுகளுக்கு
முக வாட்டம் !!

செங்கதிர் தான்
சிறுசுகளுக்கு
ஊட்டம் !!
அதைக் காணுங்கால்
பொங்கிப் பாயும்
ரத்த ஓட்டம் !!

இந்த ஆட்டத்தில்
அந்த அளவுக்கு
அவர்கட்கு நாட்டம் !!
அளவறியா இட்டம் !!

அடம் பிடித்து
அன்னையிடம் உத்தரவு வாங்க
செய்வர் பல
திட்டம் !!

-- தொடரும்

Thursday, March 02, 2006

கடல் - 12

jpg0065

கடலுக்கும் நமக்கும்
ஒற்றுமை
சீறவும்
அத்து மீறவும்
செய்யும் அழுத்தத்தில் !!

கொதித்தால்
இரண்டுமே பொங்குகிறது !!
பார்ப்பதற்கு பயம் மட்டும்
தங்குகிறது !!
பூமி தான் அத்துயரத்தை
தாங்குகிறது !!

கடலுக்கும் நமக்கும்
இன்றைய உறவு
தொட்ட குறை !
விட்ட குறை !!

தொட்டுக் கொள்ள
அதன் உப்பு நம்
இலையில் !!

விட்டுப் போன
நம் தலைவர்
அதன் மணலில்
சிலையில் !!

-- முற்றும்

கடல் - 11

இக்கரைக்கு
அக்கரை என நாம்
வாழ்கிறோம்..

கடலோ
எக்கரையும்
சர்க்கரை என
ஆசையாய் வருகிறது..

மனிதன்
கரும் பறவைக்கு
சோறு போடுகிறான்
வரும் உறவைக்
கூறு போடுகிறான்

என் இடம்
என்னிடம் என
இடறுகிறான்
ஏகமாய் கதறுகிறான் !!
இனத்தை உதறுகிறான் !!

கடல் கொண்டதை
எல்லாம் கொடுக்கிறது !!
போதாததற்கு கொண்டலையும்
கொடுக்கிறது !!

மீன் தான் என்னிடம் !
பிடித்தால்
மீன் 'தான்' உன்னிடம் !!
என புகல்கிறது !!
புகன்ற வேகத்திலேயே
அகல்கிறது !!

கடல்
தான் கொடுத்தவற்றிற்கு
கூலி வாங்குவதில்லை
தன் வேலையில் தூங்குவதில்லை
முன்னேற்றத்தில் தேங்குவதில்லை
எவரையும் ஒதுக்கி நீங்குவதில்லை
அதனால் என்றும் ஏங்குவதில்லை

வந்தாரை தாங்குகிறது !
இதனை உணர்ந்தார் புகழ்
ஓங்குகிறது !!

-- தொடரும்