Wednesday, October 28, 2009

சிக்குன் குனியா. . . . -- 1



அவற்றின் உணவு
அகில ஜீவராசிகட்கும்
அத்தியாவசியமான ஒரு திரவம் !!
அவற்றால் நமக்கோ
அன்றாடம் உபத்திரவம் !!

அயர்ந்த மனிதனுக்கு
அவை வைக்கும்
அதன் அளவில்
அன்பாய் ஒரு முத்தம் !!

எடுத்த பொருளை சிந்தாது
எவ் வரிசையிலும் முந்தாது

தொன்று தொட்டு உண்டதற்கு
தொழில் சுத்தம் !!

மாலைப் பொழுதின்
மயக்கத்தில் அவை
மதி இழக்கும் !!

நம்மை அறியாமல்
நம் தொடையில்
நச்சென்று தாளமிட

நம் மதி
நம்மைப் பழக்கும் !!

அதன் தேவை இரத்தம்
அப்போதைக்கு !!
அடங்காக் குடியெனும்
அப் போதைக்கு !!

வகை வகையாய்
வட்ட வட்டமாய்

வசதிக்கு ஏற்ப
வத்தி வைத்தும்......

வாயிற் கதவை
பொத்தி வைத்தும்....

கொல்லிகளை தெளித்தும்...
களிம்புகளை பூசிக்
கவலையில்லை இனி எனக்
களித்தும்...

ஒடுக்க முடியவில்லை மனிதனால்
ஒருபோதும் அவற்றை !!
மறந்தான் அவன்
முதற்கண் அவனது தவற்றை !!

அதிகப்படியான தூக்கமும்
அசுத்த நீர் தேக்கமும்

நாடு நாறினால்
நமக்கென்ன எனும் நோக்கமும்

மனிதனை முடக்குகின்றன !!
மண்டியிட வைத்து மடக்குகின்றன !!

மலேரியா
டிங்கு
ஃபைலேரியா என

பல வியாதிகள் அவனை
பலவாறு அடக்குகின்றன !!

”சிக்குன் குனியா” எனும்
சித்திரவதையில்
சில நாளாய்
சிக்கியிருக்கிறது நம் நாடு !!

சிக்குண்டு தவிக்கின்றார்
சிரமத்தில் பலர்
செய்வது அறியாது !!

இன்ன பிற சுரம் போல்
இச்சுரமும்

மூன்று நாள்
மூலையில் ஒடுங்கவும்...
குய்யோ முய்யோ என
குளிரில் நடுங்கவும்...

ஒருமித்து செய்யும் !!
உடல் நையும் !!

பத்தாம் நாள் முதலாய்
பலத்த வலி
பலவாறு உடலில் தங்கும் !!

அது போல் ஒரு வலி
அம்மவோ!
அறிந்ததில்லை நான்
அகிலம் எங்கும் !!

தொடரும். . .

Labels: , ,

Wednesday, October 07, 2009

நோபல். . . .




அது
அகில உலக அளவில்
அளப்பரிய மேதமையை
அளக்கும் விதமாக
அமைந்த பரிசு !!

அதனோடு ஒப்பிடின்
அனேக பரிசு தரிசு !!

அதன் பெயர் நோபல் !!
அவ்விருதுக்கு ஒருவர்
அனேக காலம் தாழ்த்தி
அழைக்கப்பட்டால்
அந்தோ!
அவருக்கு “நோ” பல் !!

இளமையில் ஒருவர்க்கு அது
இனிதே கிடைக்குமேயாயின்

அவரிடம்
அனுதினம் காணலாம்
வாயெல்லாம் பல் !!

CV RAMAN
SubRAMANiam Chandrasekhar

இவ்வரிசையில் அறிவியலுக்காக
இந்தியர் ஒருவர்
இறவாப் பெரும் புகழை

வேதியியலுக்காக வென்று
ஏற்றிருக்கின்றார் இன்று !!

அவர் பெயர்
VenkatRAMAN Ramakrishnan !!

முதல் ராமனுக்கும்
மூன்றாம் ராமனுக்கும்
தமிழகத்தில் பிறப்பு !!

அன்றே சொன்னாள்
அவ்வைப் பாட்டி

“கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு “ !!

கரத்தில் வில்லேந்தி
காடு மேடிறங்கி...

கைப்பிடித்தாளை தேடி
கணமும் வாடி....

அணிலைத் தடவி...
அடவி அடர்ந்த
வழியைத் தடவி...

கல்லால் பாலமிட்டு...
துறவுக் கோலமிட்டு...

அலைந்தான்
அந்நாளைய ராமன்
பல மைல் கல் !!

திரை கடல் ஓடி
திரவியம் தேடி

நீலக் கடல்
நட்சத்திரத் திடல்
நம் உடல் என

ஆண்டாண்டு காலம்
ஆராய்ச்சியின் மூலம்

தன் “home” விட்டு
StockHolm தொட்டு

நோபல் வாங்கும்
இன்றைய ராமன்களால்
இந்தியா அடைகிறது

முன்னேற்றப் பாதையில்
மற்றுமொரு மைல்கல் !!

Labels: , , , , ,