நேசக் கரம் - 01
"அறஞ் செய விரும்பு" -
இயம்புகிறது சூடி !
சிந்திப்போம் இதனை
சிந்தனை கூடி !!
படிமிசை வாழும்
பல்லாயிரம் உயிர்க்கு
ஆப்பிரிக்கா தான்
வேர் !
அவ் வேர்க்கு
துயர் வரின்
ஆட்டம் காணாதா
உலகத் தேர் ?
மரபியல் உயிரியல்
அறிவியல் புவியியல்
செப்புவது யாது?
கொடுங்கள் காது..
அனைத்துக்கும் ஆதாரம்
ஆப்பிரிக்கா கண்டம் !
அறிந்ததா அதன் துயரை
பல நாள் வரை
அண்டம் ?
உணவுக்கு ஏங்கும்
வாய்கள் !
உயிரை வாங்கும்
நோய்கள் !!
ஒரு புறம் வறட்சி !
மறு புறம் புரட்சி !!
உலகோர் கண்களில்
மிரட்சி !!
Somalia
Sierra Leone
Sudan என
திரும்பிய இடமெங்கும்
கலகம் !!
மிரண்டது உலகம் !!
சமாதானப் பேச்சு
இறக்கையில்..
சுதந்திரத்தை காணமுடியுமா
சமாதானப் புறாவின்
இறக்கையில்?
-- தொடரும்
1 Comments:
வறுமைக்கு உதவ குரல் கொடுக்கும் நல்ல கவி வரிகள்.
தொடரட்டும் உங்களஅ பணி. வாழ்த்துக்கள் நண்பரே.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home