கடமை
மண்மிசை வாழும்
மானிடர்
படிப்பின்றி காணலாமோ
இடர்?
பயின்றால் அன்றோ
ஒளிரும்
அறிவுச் சுடர்?
மானுடம்
பயிலாதிருப்பது மடமை !
அம் மடமை போக்குவது
நம் கடமை !!
ஏரார்ந்த இக் கருத்தை
ஆதி நாள் தொட்டே
ஆரத் தழுவிய கல்லூரிகளில்
உண்டு
சென்னை கிறித்துவக் கல்லூரிக்கு
முதலிடம் !
அது அறியாமை எனும்
இருள் நீக்கும்
அகலிடம் !!
சுந்தர்ஜி, கரியப்பா
சேஷன் என
அக் கல்லூரியில்
பயின்றோர் பட்டியல்
பல தூரத்துக்கு
நீளும் !!
பாராட்டில்
தட்டித் தட்டியே
சிவந்திருக்கிறது
இதனில் படித்த பலரது
தோளும் !!
ஆம் அன்பர்களே !!
அக் கல்லூரி தான்
இந்திய நாட்டை
பெருமைப் படச் செய்த
பலரின்
படிப்புக்கு
புகலிடம் !!
இன்று...
உலகமே வியக்கிறது
அது பயிற்றுவித்த
ஒரு மகளிடம் !!
ஆம்
இப் பெருமைக்கெல்லாம்
மெருகு சேர்க்க
செருகப் பெற்ற
மயிற் பீலி
இந்திரா நூயி !
தமிழ்த் திருநாட்டில்
திருமகள் இவளை
தந்தருளியதற்கு
நாம் வணங்குவோம்
சேஷ சாயி !!
பெப்சியின்
தலை மகளே !!
எத் தடையும் உன் முன்
ஆகட்டும் துகளே !!
ஓங்கட்டும் உன் புகழே !!
இந்தியர் நாவில்
நாளும் உன் பெயர் !
களைவாயா நீயாவது
எங்கள் துயர்?
மேற்கு
மேலும் மேலும்
மேலோங்குகிறது !!
கிழக்கில் எந்நாளும்
வேல் ஓங்குகிறது !!
யாரை வைய?
என் செய்ய?
விடியும் போதே
சிவந்து விடுகிறது
கிழக்கு !!
அதை உலுக்குகிறது
பெப்சி நல்லதா கெட்டதா
எனும்
நாட்பட்ட வழக்கு !!
திரும்பட்டும் உனது பார்வை
இந்தியா பக்கம் !!
தீரட்டும் பெப்சியில்
பூச்சி கொல்லி உள்ளதா
எனும்
தர்க்கம் !!
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home