Friday, September 22, 2006

சினிமா - 08

சினிமா - 08

பரந்த உணர்வு வரின்
தர்காவிலும் தெரிவாள்
துர்கா !!

சிலுவை !
சேர்த்தும்
அழகு பார்க்கலாம்
கொலுவை !!

"சண்டியரை"
விருமாண்டி ஆக்கியது
நொடிக்கொரு தரம்
அவ் வழக்கு கண்ட
நிலுவை !!
சாதி இன மொழி
கடந்த தமிழ் படங்கள்
அடையும்
உச்சக் கட்ட
வலுவை !!

அடங்க வேண்டும்
அத்து மீறி எழுதுவோரது
கொட்டம் !!
அதற்காகவாவது
தமிழக அரசு நிறுவவேண்டும்
சட்டம் !!

மத இன சாதி
இல்லாமல் எழுதுவதே
முறை !
மீறினால் சிறை !!

என்னைச் சிலர்
எள்ளலாம் !!
இது எழுத்துச் சுதந்திரத்தை
அடக்கும் திட்டம் எனக்
கொள்ளலாம் !!

A.G. Gardiner
எனும் ஆங்கில எழுத்தாளர்
எழுதினார்
இதற்கு விடை !
"பலரது சுதந்திரம் காக்க
சிலரது சுதந்திரத்துக்கு
வைக்கலாம் தடை" !!

U/A எனும்
ஆதி காலத்து
மதிப்பீடுகளை
களையுங்கள் !!
மேலை நாடுகள் போல்
படத்திற்கு ஏற்ப
G, PG, PG-13, R, NC17, MA
என புதிய
மதிப்பீடுகளை
விளையுங்கள் !!

சுதந்திரம் அமெரிக்கர்களுக்கு
பிரதானம் !!
ஆயினும் அவர்களிடமுண்டு
வெறியைத் தூண்டும்
படம் எடுக்கலாகாது எனும்
நிதானம் !!

மதமும் இனமும்
தமிழ்ப் பாடல்களில் இருத்தல்
தகாது !!
இருப்பின்
தமிழ்த் திரையின் பெருமை
மிகாது !!

இனியும் பொறுத்தல்
ஆகாது !
குற்றச் சாட்டுகளை
கேட்க வேண்டும் கலைஞர்
காது !!

-- முற்றும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home