கடல் - 11
இக்கரைக்கு
அக்கரை என நாம்
வாழ்கிறோம்..
கடலோ
எக்கரையும்
சர்க்கரை என
ஆசையாய் வருகிறது..
மனிதன்
கரும் பறவைக்கு
சோறு போடுகிறான்
வரும் உறவைக்
கூறு போடுகிறான்
என் இடம்
என்னிடம் என
இடறுகிறான்
ஏகமாய் கதறுகிறான் !!
இனத்தை உதறுகிறான் !!
கடல் கொண்டதை
எல்லாம் கொடுக்கிறது !!
போதாததற்கு கொண்டலையும்
கொடுக்கிறது !!
மீன் தான் என்னிடம் !
பிடித்தால்
மீன் 'தான்' உன்னிடம் !!
என புகல்கிறது !!
புகன்ற வேகத்திலேயே
அகல்கிறது !!
கடல்
தான் கொடுத்தவற்றிற்கு
கூலி வாங்குவதில்லை
தன் வேலையில் தூங்குவதில்லை
முன்னேற்றத்தில் தேங்குவதில்லை
எவரையும் ஒதுக்கி நீங்குவதில்லை
அதனால் என்றும் ஏங்குவதில்லை
வந்தாரை தாங்குகிறது !
இதனை உணர்ந்தார் புகழ்
ஓங்குகிறது !!
-- தொடரும்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home