Nano...
தாழ்த்துகின்றார்
தரணியிலுள்ளோர்
சிரத்தை !!
குலுக்குகின்றார்
குதூகலத்தில்
ஒரு கரத்தை !!
டாட்டா மோட்டர்ஸை
வழிநடத்திச் செல்லும்
அக்கரம்
நன்கு அறியும்
நான்கு சக்கரம் !!
பெயர் ரத்தன் !!
அவனொரு ஜித்தன் !!
ஒரு லட்சத்தில்
சுக்கில பட்சத்தில்
நீயோ நானோ
என போட்டி போட
உருவாக்கி விட்டான்
Nano !!
மாருதிக்கு இனி
தேவைப்படும் Eno !!
சில கேள்விகள்
எழுகின்றன !!
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
காதில் விழுகின்றன !!
கூடும் நெரிசல் !!
தேவைப்படுமோ
பணி செல்ல இனி
பரிசல்?
வாகனப் புகை
கூடும் !!
இருமியே தேயாதோ
கூடும் ?!
விலை ஏறும்
கச்சா !!
எண்ணெய் ஏற்றுமதியாளர்
பிச்சா ?
இது
மாறு தீ !!
இதை சமாளிக்க
விலையைக் குறைக்குமோ
மாருதி ?!
விபத்தில் தாங்காது
நாடி !!
போவாரோ பலர்
இதனை நாடி ?!
போக்குவரத்தில் அதிக
முகம் கட்டுவோர்
இரண்டு மூன்று சக்கர
வாகனம் ஓட்டுவோர் !
டாடாவின் எண்ணம்
அவர்களை வசப்படுத்த !!
Nano வந்திருக்கிறது
அதனை நிசப்படுத்த !!
மொத்தத்தில்..
உறுதியாய் ஒன்று தெரிகிறது
உலகோர் சித்தத்தில்...
நீயோ நானோ
என
போட்டியை ஏற்படுத்தும்
நானோ !!
Labels: $2500 car, Ratan Tata, Tata Nano