Tuesday, January 15, 2008

ரோபோ

shankar

அவன்
இந்தியனை
இந்தியனாக்க
இந்தியன் எடுத்த
இந்தியன்

ஒழியுமா தேசத்தின்
ஒழுங்கீனம்
ஒருக்கால் ஒருவன்
ஒரு நாள் முதல்வனானால்?

என..
உத்தேசித்தவன்
தேசத்தை அளவின்றி
நேசித்தவன் !!

உன்னதம் மிக்க
உலக திரைப்படங்களை
உரக்க வாசித்தவன் !!
சினிமாவை முழுமூச்சாய்
சுவாசித்தவன் !!

Jeans அணிந்த
Teens
Voice உள்ள
Boys

என..
ஒட்டுமொத்த தமிழகத்தின்
காதலன்

சாதி
சாரைப் பாம்பு
சார்ந்து படமெடுப்பாரை

சாதிக்க அவை
சாத்தியமாகா எனச்
சாற்றி

தனித்து நின்ற
அந்நியன் !
தருக்கு தலைக்கேறா
கண்ணியன் !!

தமிழ் சினிமா
தலையெடுத்ததில்
பெரும் பங்கர்
பெருமைக்குரிய சங்கர் !!

எதிலும் அவர்
பின் தங்கர் !!
எதிலும் அவர்
பின் "தங்கர்" !!

இன்று..
முக்கு மூலையெல்லாம்
"வையகத்தில் ஒரு பிள்ளை
சங்கர் அன்றி கண்டதில்லை"
எனும் தோடி !!
காரணம் 100 கோடி !!

இது
இந்தியாவின்
சனத் தொகையா?
இந்தியன் எடுத்தவரின்
பணத் தொகையா?

என
பலரது விரல்
மூக்கில்!!
பழிச்சொல் பலர்
நாக்கில் !!

கஞ்சிக்கும் கூழுக்கும்
இந்தியன் தொடுவது
மண் பாண்டம் !!
அவனை வசப்படுத்த
அவசியமா பிரம்மாண்டம்?

இது தான்
தலையாயதாய் வைக்கப்படும்
வினா !!
சங்கருக்கோ இது
பல நாள் கனா !!

மண் குடிசை வர்க்கம்
மேல் தட்டு வர்க்கம்
என அனைவரையும்
போ போ
எனச் சொல்லுமா
ரோபோ ?

Labels: , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home