Sunday, January 13, 2008

நகை - ஆடம்பரமா? அவசியமா?

இன்றைய உறக்கம்
இல்லறத்தின் இறக்கம் என
இமையும் நினைந்து..

இரவு முழுதும்
இரு விழி திறந்து..

இடுப்பைக் குறுக்கி
இரும்பை உருக்கி

இளைஞன் அவனது
இரு கை வளையும்

அதன் பெருமை
அறியுமா
அவன் பத்தினியின்
இரு கை வளையும்?

அதிகமாக காசை
அதிகமான ஆசையினால்
அதிகமாக இறைத்து
அல்லலுறுகிறாள்! அந்தோ
அவள் எள்ளலுருகிறாள் !!

சீதையின்
சீதனம்
சீர் மிகுந்த சனகனின்
சீரா?
சீதா ராமன் பேரா?

மண்டிணி ஞாலத்தில்
மனதில் என்றும்
மங்காதிருப்பது....

நகையணிந்து
நடனமாடி
நயத்தக பேசிய மாதவியா?

அல்லது..
சிகை கலைந்து
சின்னா பின்னமாய்
சீர் மதுரை எரித்து

மாசாத்துவான் மகனை
மா உத்தமனாக்கிய
மாநாய்கன் மகளா?

நகையால் அன்று
நகரமே எரிந்தது !!
நானிலத்தார்க்கு இது
நாளும் தெரிந்தது !!

பெண்..
அவள் சமுதாயத்தின்
அங்கம் !!
தேவையா அவளுக்கு
தேவைக்கு அதிகமாக
தங்கம்?

சிக்கனம் எனச் சொல்லி
இக்கணம் இறையலாகாது
பணம் !!
இறைத்தால் இனிக்காது
மணம்!!

Labels: , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home