Thursday, October 23, 2008

தப்புத் தாளங்கள்....

2008102355691301

Picture Courtesy: The Hindu



இதற்கு அது என
இரு கோடுகளாக
இணையாயிருக்கும்...
இருப்பினும் இரண்டும்
இணையாதிருக்கும்....

இருளில் கிடக்கிறது அது
இனவெறி கண்டு !!
இத்தனைக்கும் அது
இயல்பாகவே உறுதிமிக்க
இரும்புத் துண்டு !!

இது தான்
இருப்புப் பாதை !!
இன்று அதற்கு
இலேசில் குணமாகா வாதை !!

வாசிக்கும் ஏடோ
வசிக்கும் நாடோ

தக்க பிணைப்பின்றேல்
தனித் தனியாய்ப் பிய்ந்து விடும் !!
தலை தொய்ந்து விடும் !!

இமயம் முதல் குமரி வரை
இந்தியாவை இணைப்பது
இரயில்வே துறை !!
இன்றதன் முகத்தில்
இரத்தக் கறை !!

இயல்பாகவே எனக்கு
இரயில்வே இலாகாவிடம்
மட்டற்ற மதிப்புண்டு !!
இந்தியன் என அனற்றும்
ஈனர் சில செயலால்
இன்று கிடக்கிறேன் கொதிப்புண்டு !!

மாநிலத்துக்கு மாநிலம்
தலைவிரிக்கிறது வன்முறை !!
பார்த்திருக்கிறோம் நாமிதனை
பாரதத்தில் பன்முறை !!

கை கால் உதறி…
கணமும் பதறி..
கவலையில் கதறி....

மக்கள் வெறிக்கின்றனர் !!
எஞ்சியோர் இரயிலையே எரிக்கின்றனர் !!

எல்லாவற்றுக்கும் காரணம்
எங்கோ ஒரு மடையன்
எவர் எவரையோ
நையப் புடைத்தான் !!
மராட்டிய மண்
மராத்தியர்க்கே என
கையைத் துடைத்தான் !!

போதாததற்கு
போதும்
”போ உன் ஊருக்கு” என
போக்கற்றாரை மிரட்டுகிறான் !!
பொதுப் பணியில் சேர
பொதுத் தேர்வுக்கு வந்தாரை
விரட்டுகிறான் !!

நாடு தீப்பந்தத்தில் !!
நம் பிரதமர் கவனமெல்லாம்
நடந்து முடிந்த
அணு சக்தி ஒப்பந்தத்தில் !!

பிரதி தினமும்
பிரளயமான பூமி பீகார் !!
இப்படி ஒன்று நடக்க
இனி லல்லுவும் அங்கே போகார் !

தீப்பற்றி எரிகிறது
திசை எங்கும் !!
கை சொறிகிறாரா
மன்மோகன் சிங்கும் ?

Labels: , ,

Wednesday, October 15, 2008

உயரப் பறக்கா ஊர்க்குருவிகள். . .

3401532220_rajthackeray

ஏறுமுகமாய் எண்ணை
விலையும்..
வீழுமுகமாய் வர்த்தக
நிலையும்...

இரு குழுமத்தை அழுத்தியது
ஒன்று சேர்ந்து !!
போயின அவை
படு சோர்ந்து !!

மக்களும்
பணத்திடை புத்தி வைக்க...
பயணத்தை ஒத்தி வைக்க...

அங்கும் இங்கும் செல்லாது
அவரவர் இருக்கையில்
அவரவர் இருக்க..
இலாபம் காணமுடியாது
இந்நிறுவனங்களை இந்நிலை
இறுக்க

முடியவில்லை அவற்றால்
முன்போல் ”இறக்கை” விரிக்க..
முகத்தில் முழுப்பொழுதும்
முறுவல் தரிக்க...

தன் குறை சொல்லியவை
தனித்து போராடி அலுக்க...
விழைந்தன விரைவாய்
வியாபாரத்தில் கை குலுக்க.....

இரு நிறுவனம்
இணையுங்கால்..
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
சில வேலைகளை
பிணையுங்கால்....

ஒரே வேலை செய்யும்
ஒரு சிலரை
சேமிப்பை முன்னிறுத்தி
வேலையினின்று சேதிக்கலாம்..
பாதிக்கப்பட்டாரை அது
பெரிதும் சோதிக்கலாம்....

அதற்காக அரசியல்
அங்கே எப்படி
அடியெடுக்கலாம் ?
”சட்டம் தன் கையில்” என
சனம் என்னணம்
முடிவெடுக்கலாம் ?

செய்த செயலின்
செய் விதம் முறையா ?
"செய்ய" செயலின்றேல்
செய்தவர்க்கு சிறையா?

இந்திய நீதிமன்றங்களே
இதனைச் சொல்ல வேணும் !!
எடுப்பார் கைப்பிள்ளையாக
அது மாறிட
இந்தியனின் நிலை கோணும் !!

மிக ஆத்திரம் கொண்ட
மகராட்டிர மக்களே !!
கேளுங்கள் எமது சொற்களே !!

தாக்கரேயிடம் தஞ்சம் என
ஏன் போனீர் ?
அனேகருக்கு கேள்விக்குறியாக
ஏன் ஆனீர் ?

சட்டத்தை கையிலெடுக்கலாமா
தனியொருவன் ?!
அப்படியே எடுத்தாலும்
அவனை விட்டு வைக்கலாமா
இனியொருவன் ?!

நீரா அவனுக்கு பொருட்டு?
தீச்சொல்லன்றி வேறு அறியானால்
தீராது உமது இருட்டு !!

உம்மைக் காக்கப் போவது
சட்டப் பேனாவா?
நவ நிர்மாண் சேனாவா ?

யார் பெரிய குற்றவாளி?
அரசியல் அமைப்புச் சட்டம்
அறவே மறந்து
அளவுக்கதிகமாக ஆடுபவனா?
அல்லது
அவனது சேவை நாடுபவனா?

அத்தகையோன் இதனாலன்றோ
அமரத்துவம் பெறுகின்றான் ?
அதற்காகத்தானே அனேகன்
அத்தொழிலுக்கே வருகின்றான் !!

அவனை ...
காராக்கிருகத்தில் தள்ளவும்
முளையிலேயே கிள்ளவும்

முனைந்து ஒரு
முடிவை எடுக்கவேண்டும்
முதல்வர் தேஷ்முக்கும் !!
இல்லையேல்....
சட்டம் ஒழுங்கின்றி
சந்தி சிரிக்கும்
எட்டுத் திக்கும் !!

Labels: , ,

Tuesday, February 19, 2008

வெறியும் நெறியும்

கொதிக்கிறது மும்பை !
வசை பாடுகிறது
வையம் வந்திருக்கும்
வம்பை !!

வடக்கில்
நடிப்பின் அச்சன்
அமிதாப் பச்சன்

அவரை..
இங்கு நாடுகிறாய்
காபிக்கு !
விழுமுதலை கொடுக்கிறாய்
உபிக்கு !!

என
தாக்கரே தாக்க
வன்முறையாளர் கத்தியை
தூக்க

குண்டுக்கு கலங்காத
மராட்டிய மண்
துண்டாகி கதறுகிறது !
தேசமே பதறுகிறது !!

தினசரி தினசரியில்
இன வெறி !
மறைந்து விட்டதா
"வேற்றுமையில் ஒற்றுமை"
எனும்
சன நெறி ?!

ஆட்சியாளரின்
பெரிய கடமை
பொறுப்பு !!
அதனினும் பெரிது
அடக்கம் எனும்
"பொறுப்பு" !!

இதுவே
மும்பை உணர்த்தும்
உண்மை !!
உணர்ந்தால் உருவாகும்
நன்மை !!

Labels: , ,