சென்று வா....
எமனுக்கும் வந்ததோ
அறிவியல் பாசம்?!
ஒப்பற்ற ஒருவரிடத்து
வீசிவிட்டான் பாசம் !!
சுஜாதா..
எழுத்துலகு "அதிரும்"
அப் பெயர் சொல்ல !!
அதற்கு
அவர் மறைவால்
ஆரம்பித்திருக்கிறது
துயர் மெல்ல !!
தமிழன்..
சாமன்யமாய் அறிவியலில்
அமிழன்...
அஞ்ஞானமான விஞ்ஞானம்
அணுவினின்று தொடங்கி
அணு அணுவாய்
அவரெழுத்தில்
அடங்க..
பெண்ணியம்
மானியம் மகசூல் என
பேசியவர்
பெண்டியம் ரேடியம் தோரியம்
என
தொடங்க...
தமிழனின் சிந்தை
ஏறியது !!
தமிழ் எழுத்துலகு
மாறியது !!
அது மட்டுமா...
சார்பியல்
சாக்ரடீஸ்
ஸ்ரீரங்கம்
சாரங்கம்
பூதம்
பொய்கை என
"கற்றதையும் பெற்றதையும்"
அவர் தர..
பிரசுரிக்க போட்டி போட்டு
பத்திரிகைகள்
முன் வர..
வறட்சி கண்ட
பத்திரிகைகள்
புரட்சி கண்டன
விற்பனையில் !!
பலர் வந்தனர்
இவர் போல் எழுதும்
கற்பனையில் !!
அனைவருக்கும் அளப்பிலடங்கா
வருத்தம்
அவர் இன்று காலமாக !!
ஆயினும் என்ன?
அவர் எழுத்து நிற்கும்
காலம் காலமாக !!
Labels: jeeno, kattrathum pettrathum, obituary, rajini, sivaji, sujatha