Tuesday, February 19, 2008

ஒரு வரி...ஒரு கதை

200px-TaareZameenPar

குத்தாட்டம்
குறைந்த ஆடை

பண இறைப்பு
பளிங்கு மேடைகள்

சாதி
சடங்குகள்

பாம்பு
குரங்கு

காவல் துறை ஏச்சு
அரசியல் பேச்சு

"பஞ்ச்" வசனம்
நஞ்சு நடனம்

பன்முறை "தலை"யெடுக்கும்
வன்முறை

காது கிழியும்
இசை
ஆய் ஊய் எனும்
வசை

இவை
எதுவும் இல்லாமல்..
சொல்ல வேண்டியதை
மிகைப்படுத்திச் சொல்லாமல்

ஒரு படம் வராதா
என இருக்கிறதா
நெருடல்?
கேட்கிறதா உளம்
மயிலிறகின் மெல்லிய
வருடல் ?

"தாரே ஸமீன் பர்"
பாருங்கள் !!
தரமான படம்
தந்த அமீர்கானுக்கு
இரு கை தாருங்கள் !!

படம் முடியும் போது
தொண்டையை அடைக்கும்
இனம் புரியாத சோகம் !!
அதில் தெரியும்
அமீரின் தாகம் !!

தமிழில் இம்மாதிரி
படங்கள் சொற்பம் !!
கேட்டால் சொல்லிடுவார்
நமது ரசிகனின் ரசிப்புத்தன்மை
அற்பம் !!

காட்சிக்கு காட்சி
பார்த்துப் பார்த்து
செதுக்கப்பட்டிருக்கும்
இப்படம்
அமீரின் கையொப்பமேந்திய
அழகுச் சிற்பம் !!
கிடைக்கட்டும் அக்கைக்கு
"ஆஸ்கார்" சிற்பம் !!

Labels: , ,

1 Comments:

At 2/19/2008 2:05 PM , Blogger Unknown said...

rightly said, appreciate your thoughts...

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home