Tuesday, October 30, 2007

சரஸ்வதி சதகம் - 01

வெண் கமலத்தே வீணையோடு வீற்றவளை
வெண்பாவிற்கு கேட்டேன் வழி - தண்
கண் சிமிட்டி காட்டினாள் உபாயம்
எண்ணியதும் வந்தது பண்.

Thursday, October 25, 2007

சரஸ்வதி சதகம் - 00

காவிய நாயகி

அவள்..
கல்வியின் அச்சு !
கல்லாமையின் நச்சு !!

இயல் இசை நாடகம்
இன்ன பிற கலைகள்
இவளிடத்தில்
பிறக்கின்றது !
இருந்தும்
நானிலம் இவளை
நவராத்திரி அன்றி
பிற நாளில்
மறக்கின்றது !!

மெய்யுள்
அவளருளால் வரும்
செய்யுள் !!

அவள் இல்லையேல்
எழுத வராது
எழுத்து கைக்கும் !
எழுத்து கைக்கும் !!

கம்பனோ கபிலனோ
வாணி சொல்
வைத்தால்
கவி வரும் !
இல்லையேல்
கவி வரும் !!

நாவில் சொல் வைப்பவளை
பாவில் சொல்லியிருக்கிறேன்

கூற்றுக்குள் அடங்காதவளை
நூற்றுக்குள் அடக்க
விழைந்திருக்கிறேன் !
இது வரை போகாத
இலக்கணப் பாதையில்
நுழைந்திருக்கிறேன் !!

அன்னையே...
அவ்வப்போது
துவளும் என் நா !!
தூக்கி விட வா !!

Monday, October 22, 2007

சரஸ்வதி சதகம் - 00

அது ஒரு
இசை விழா !!
என் குருவின் பாணியில்
சொல்கிறேன்...
அங்கு தமிழ்
இசை விழா !!

பாடப்பட்ட பாடல்களை
காதுகளால் மென்றிருந்தேன் !!
நமக்கென்ன என்றிருந்தேன் !!
வெறுமனே நின்றிருந்தேன் !!

விழா முடிந்தது...
எல்லோர் முகத்திலும்
திருப்தி படிந்தது...

வந்தது தீபாராதனை..
செய்யின் தீரும்
தீரா வேதனை

எல்லோர் கையிலும்
கொடுக்கப்பட்டது
மலர்...
அதனை சமர்ப்பிக்க
விரைந்தனர்
பலர்...

அங்கு இருந்தன
வாணி கணபதி என
இரு படங்கள்..
அதன் முன்னம்
பலகாரம் தாங்கிய
சம்படங்கள்....

விழுந்தன மலர்கள்
வேழ முகனின்
படத்திற்கு
ஒன்றன் பின்
ஒன்றாக !!
எனக்கு படவில்லை அது
நன்றாக....

வாணி படம் நோக்கி
ஒருவரும் எழவில்லை !!
அவள் இருந்த இடத்தில்
ஒரு இதழும்
விழவில்லை !!

நாவில் சொல் வைத்தவளை
நானிலம் அன்று
மதிக்கவில்லை !!
என் மனம்
சிறிதும் அதற்கு
சம்மதிக்கவில்லை !!

ஆத்திரம் தீர
எழுந்தது கை
எதுகையாய் !!
வாணியை ஏற்றினான்
ஆனைமுகன்
மோனையாய் !!

இலக்கணம் இருப்பின்
இது வெண்பா !!
இல்லையேல் இது
என் பா !!

Wednesday, October 17, 2007

சரஸ்வதி சதகம் - 00

பிள்ளையார் சுழி

அவன்...
அகவல் நாயகன் !
ஒரு பெரும் போரை
எழுதியதால்
உலகின் முதல்
தகவல் நாயகன் !!

ஆதி நாளில்
அவன் தான்
பாரதம் எழுத
தந்தம் ஒடித்தான் !
சந்தம் வடித்தான் !!

கேட்பான் ஒரு
மோதகம் !
கொடுத்தால் வருவதில்லை
பாதகம் !!

தமிழுக்கு தன்னை
தந்தவன் !
தமிழைத் "தூக்க"
முன் வந்தவன் !!

அவன்
அவ்வை வேண்டியவன் !
எனக்கு வேண்டியவன் !!
சதகம் எழுத எனைத்
தூண்டியவன் !!

சென்றிருந்தேன் ஒரு
பூசைக்கு !
அன்று தொடங்கியது
எழுத்து வேலை என்
மேசைக்கு !!

-- தொடரும்

Monday, October 08, 2007

சரஸ்வதி சதகம். . .

Stay tuned. . . . . .