Monday, October 22, 2007

சரஸ்வதி சதகம் - 00

அது ஒரு
இசை விழா !!
என் குருவின் பாணியில்
சொல்கிறேன்...
அங்கு தமிழ்
இசை விழா !!

பாடப்பட்ட பாடல்களை
காதுகளால் மென்றிருந்தேன் !!
நமக்கென்ன என்றிருந்தேன் !!
வெறுமனே நின்றிருந்தேன் !!

விழா முடிந்தது...
எல்லோர் முகத்திலும்
திருப்தி படிந்தது...

வந்தது தீபாராதனை..
செய்யின் தீரும்
தீரா வேதனை

எல்லோர் கையிலும்
கொடுக்கப்பட்டது
மலர்...
அதனை சமர்ப்பிக்க
விரைந்தனர்
பலர்...

அங்கு இருந்தன
வாணி கணபதி என
இரு படங்கள்..
அதன் முன்னம்
பலகாரம் தாங்கிய
சம்படங்கள்....

விழுந்தன மலர்கள்
வேழ முகனின்
படத்திற்கு
ஒன்றன் பின்
ஒன்றாக !!
எனக்கு படவில்லை அது
நன்றாக....

வாணி படம் நோக்கி
ஒருவரும் எழவில்லை !!
அவள் இருந்த இடத்தில்
ஒரு இதழும்
விழவில்லை !!

நாவில் சொல் வைத்தவளை
நானிலம் அன்று
மதிக்கவில்லை !!
என் மனம்
சிறிதும் அதற்கு
சம்மதிக்கவில்லை !!

ஆத்திரம் தீர
எழுந்தது கை
எதுகையாய் !!
வாணியை ஏற்றினான்
ஆனைமுகன்
மோனையாய் !!

இலக்கணம் இருப்பின்
இது வெண்பா !!
இல்லையேல் இது
என் பா !!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home