Sunday, February 25, 2007

பண்...இசை...பத்மஸ்ரீ - 02

மக்களுக்கு
பாடல்களின் எளிமை குறித்து
பற்றியது பயம்
முழுதும் இழந்தனர்
சுயம்

இனி கவிஞர் வாய்
வாய்க்கு வந்ததை உமிழும்
உய்யுமா இனி
தமிழும் ?
மனம் மறுமுறை
என்று அதில்
அமிழும்?

என..
கண்ணீரை சிந்தினர்
மூலையில் குந்தினர்

அச் சமயத்தில்
அகிலத்தையே இழுத்தது
ஒருவரது வரிகள் !!
காலப்போக்கில் விழுந்தோடினர்
அவர்முன்
மேகத்தையும் தாகத்தையும்
எழுதும் தற்குறிகள் !!

கண்ணதாசன் காலத்திலும்
இவரது பாடல்
இருந்தது !!
அரசியல் சார்ந்தோர்க்கு
விருந்தது !!

இருவரும் இரு
கோட்டி
இருந்தது இருவர்க்கிடை
கடும் போட்டி

இதற்கு இடையில்
தனது நடையில்

தனக்கென ஒரு
பாணி வகுத்து
அதன் வீச்சு தெரியுமாறு
கவிதை தொகுத்து

காட்டினார் பெரும்
உழைப்பு !!
அதற்குக் கிடைத்திருக்கிறது
அரசினின்று இன்று
அழைப்பு !!

-- தொடரும்

Monday, February 19, 2007

பண்...இசை...பத்மஸ்ரீ - 01

தேடி வந்திருக்கிறது
வெற்றி
தமிழனின் சாகை !!
தந்திருக்கிறது அவனுக்கு
ஒன்றுக்கு ஒன்பதாக
தங்கப் பாகை !!

ஆம்..
வந்திருக்கிறது தமிழகத்துக்கு
பத்மஸ்ரீ விருது
திரண்டு !
அதில் குறிப்பிடத்தக்கது
இரண்டு !!

அரிய
அதன் பெருமை
அறிய

பின்னோக்கி சிறிது
செல்வோம்
பழங்கதை ஒன்று
சொல்வோம்..

திரையுலகு கட்டுண்டு
கிடந்தது
ஆதி நாளில்
கவியரசராம்
கண்ணதாசனின்
கவிதைத் தாளில்

இதர பாடல்களை
எற்றி
அவரது பாடல்கள்
பெற்றன பெரும்
வெற்றி

இன்னதென்று அறியா
இன்பத்தில்
பித்துப் பிடித்தது
தமிழனின் பிச்சி !!
பரபரவென போனார்
கண்ணதாசன்
புகழின் உச்சி !!

தமிழர் நெஞ்சில்
கவியரசர்
நாற்காலியிட்டு உறைந்தார்
நெடுநாள் நிறைந்தார்

திடுமென
கண்ணதாசன் ஒருநாள்
மறைந்தார் !
மக்களை மாளாத் துயரத்தால்
அறைந்தார் !!

-- தொடரும்

Friday, February 16, 2007

உலகக் கோப்பை - 04

அ·ப்ரிதியோ
ஜெயசூர்யாவோ
கெயிலோ
கில்கிறிஸ்டோ

ஆட்டமே முக்கியம்
ஆடுபவன் அல்ல
என்பவனுக்கு..

ஆடுகளத்தில் அனைவரும்
ஒன்று !!
மானுடமே! இதனை அறிந்து
ஆட்டத்தோடு மட்டும்
ஒன்று !!

அவனை கட்டுவதில்லை
மதம் !!
அவனது தேவை
சதம் !!

தேசபக்தியற்றவன் என
அவனை குற்றம்
சாட்டாதே !!
இந்தியா தோற்குமேயானால்
அவ் வெறுப்பை
மாற்றணி ரசிகனிடம்
காட்டாதே !!

ஆட்டத்தில் முக்கியம்
அடிப்பவனா?
நம் நாட்டு கொடி
பிடிப்பவனா?

சிந்தி சிறிது
பொறுத்து !
சிந்தித்த பின்
சிந்தனையில் இதனை
பொருத்து !!

இன்னல் சூழ் உலகில்
கன்னலாக வருகிறது
இப் போட்டி !!
வெற்றி பெறட்டும்
சிறந்து ஆடுகின்ற
கோட்டி !!

உலகக் கோப்பையே
வருவாய் !!
உலகமே வாரியிறைக்க இருக்கிறது
வருவாய் !!

-- முற்றும்

உலகக் கோப்பை - 03

போகவில்லை என்
சிந்தனை கருத்து !!
உண்டு என்னிடம்
ஒரு கருத்து !!

கிரிக்கெட் ஒரு
கூட்டாட்டம் !!
உணராவிடில் வரும்
திண்டாட்டம் !!

2003லேயே வந்திருக்கும்
நமக்கு கொண்டாட்டம் !!
இல்லை நம்மவரிடையே
இறுதி வரை
இருக்க வேண்டிய
போராட்டம் !!

நமது பலம்
முதல் ஐவர் !!
அவ் ஐவர்
சோபிக்கவில்லை எனில்
ஆகி விடுகிறோம் நாம்
சைபர் !!

இச் சூழலில்
எவர்க்கும் பிடிக்கலாம்
தன்னாடு அல்லாத
பிற நாடு !
விளையாட்டுக்கு கிடையாது
இன தேச மத
பாகுபாடு !!

விசிறி எதிர்பார்ப்பது
தன்னாட்டின்
கெலிப்பு !!
சரியாக ஆடாமல்
அவர்கள் தோற்குங்கால்
ஏற்படுகிறது அவனுக்கு
தாளாச் சலிப்பு !!

காலப் போக்கில்..
தூய ரசிகனுக்கு
ஆட்டம் மட்டுமே
ஆகின்றது பிரதானம் !!
நோக்கில் சமத்துவம்
தேக்கியவனால் தான்
களை கட்டுகின்றது
மைதானம் !!

-- தொடரும்

Monday, February 12, 2007

உலகக் கோப்பை - 02

நூறு கோடி மக்கள்
நாக்கில் ஏந்துகின்றனர்
சூலம் !
அவர்கள் ஆசை
"வெல்ல வேண்டும் நீலம்" !!

வெல்லுமா "மஞ்சளை"
நீலம் ?
ஆக்குமா நிர்மூலம்?
சொல்லும் காலம் !

அடையுமா முன்னணி
என் அணி ?

கெலிக்குமா ?
சொலிக்குமா ?

என
மக்கள் மனதில்
வினாக்கள்..
பல வருடம்
நிறைவேறாக் கனாக்கள் !!

1983..
தெறித்தது அன்று
தெரு மண் !!
மேற்கிந்தியரை
திணறி திக்குமுக்காட
வைத்தது ஒரு
"திருமண்" !!

நாம் அடைந்தோம்
வாகை !!
இந்திய மயில்
இன்முகத்தோடு விரித்தது
தோகை !

Barbadosல் நாம்
கொடுக்கலாம் பிறருக்கு
அச்சம் !
அடையலாம் புகழின்
உச்சம் !!

ஆயினும் அணியில்..
நம்மவன் ஒருவனும்
இல்லையே ?!
தமிழன் காட்ட இயலுமா
பல்லையே ?!

-- தொடரும்

Friday, February 09, 2007

உலகக் கோப்பை - 01

எழுதத் துடிக்கிறது
என் பேனா !
எழுத மாட்டேன்
என்பேனா?

தள்ளி வையுங்கள்
தேங்கிக் கிடக்கும்
கோப்பை !
வருகிறது உலகக்
கோப்பை !

16 அணிகள்
களம் இறங்குகின்றன!!
உலகோர்
உளம் கிறங்குகின்றன!

இப்படி ஒரு
வாய்ப்பா??
இசைக்கின்றனர்
இளம் வீரர்கள்
வாய்ப் பா !!

புது வீரர்களுக்கு
புளி கரைக்கின்றது
உந்தியில் !
அவர்களது பயம்..
மானம் கப்பலேறுமோ
முச் சந்தியில் ?!

தேடுகின்றனர் இளவட்டம்
வயிற்றுக்கு வெந்தயம் !
அனுபவப்பட்டார்க்கு
அமையலாம் இது
கடைசி பந்தயம் !

முரளி..
ஆவாரா சச்சினுக்கு
அரளி?

போன்டிங்..
ஆவாரா நமக்கு
Daunting?

நாளும் இந்தியர்
சுற்றுகின்றனர் கோவில் !
சுழல்கிறது பல கேள்வி
அவர் தம் நாவில் !!

-- தொடரும்