Monday, January 29, 2007

விழுந்தான் வில்லன் - 03

ஆம்...
வந்து விட்டது
சட்டம் !
குதூகலிக்கிறது இள
வட்டம் !!

உணவகங்கள், இல்லங்கள்
இன்ன பிற
தொழிற்சாலைகள்
இவற்றில் இனி
14 வயதுக்குட்பட்ட சிறார்
இரார் !!
அரசின் உத்தரவு படு
கரார் !!

துள்ளி தூள்
கிளப்புகின்றன இளசு!
திக்கெட்டும் ஒலிக்கிறது
புகழ் முரசு !!
பெருமையில் களிக்கிறது
என் சிரசு !!

மக்களிடம் ஒரு
வேண்டுகோள் !
அவர்கள் தர வேண்டும்
இதற்கு தோள் !!

சட்டம்
திட்டம்
இயற்றுவது
சுலபம் !!
செய்து விடும் அதனை
நொடிப்பொழுதில்
பலபம் !!

செயலாக்குவது கடினம் !!
தேவை மெத்த
படினம் !!

நலிவு அடைந்தோருக்கு
பொலிவு தந்திருக்கிறது
அரசின் பேனா !!
ஏற்றமுற எல்லோரும்
படிக்கட்டும்
"அ"னா !

கட்டுகிறானே
சிவகாசியில் சிறுவன்
வெடிக் கட்டு..
அவனுக்கு இச் சட்டம்
முன்னேற்றத்தின்
படிக் கட்டு !

"இளமையில் கல்"
- உடைப்பதற்கா ?!
அல்லது செறிவான சமுதாயம்
படைப்பதற்கா?!

இக் கேள்வி
இனியாவது
இந்தியர் நாவில்
இருக்கட்டும் !
இளைஞர்
இரத்தம்
இரக்கும்
இராக்கதர்களை
இனி அது
இறுக்கட்டும் !!

பெற வேண்டும்
இச் சட்டம்
வெற்றி !!
காணலாகாது
இனியும் ஒரு
இளைஞன் கண்
கண்ணீர் வற்றி !!

அந்நாள் அமையின்
அவனியில்
அனுதினமும் புழங்கும்
இந்தியாவின்
பெயரும் !
இல்லாவிடில்
இந்தியாவின் பெருமையே
ஒரு சேர
பெயரும் !!

-- முற்றும்

Wednesday, January 17, 2007

விழுந்தான் வில்லன் - 02

தன் பெண்
வளர வேண்டும்
முத்து அளைந்து..
பணிப்பெண்
தளர வேண்டும்
முதுகு வளைந்து..

தன் பையனை
கரத்தால் அள்ளி
கன்னம் கிள்ளி

செல்லுக பள்ளி
வெல்லுக துள்ளி
என சொல்லுவான் !!

வேலைக்காரப் பையனை
"பொறுக்குக சுள்ளி !"
அறிவுக்கும் உனக்கும்
சற்று தள்ளி என
கொல்லுவான் !!

பல நாள்
பல இந்தியன்
இன்னணம்
இருந்தான் !
என்ன சொல்லியும்
திருந்தான் !!

பல சிறார்களை
இது கொன்றது !!
எஞ்சியோர் எலும்பை
நாளும் தின்றது !!
பல நாள்
இன்னணம் சென்றது !!

கொடுமையானது
மிடிமை !!
அதனினும் கொடுமை
அடிமை !!

வசதியற்று வாழலாம் !!
வாழ்வற்று வாழ்வதா?
அன்றாடம் துயரில்
ஆழ்வதா?

வராதா விடிவு !!
என்ன தான் இதற்கு
முடிவு?

என நாளும்
அவர்கள் கண்
கலங்கியது !!
இன்று அவர் வாழ்வு
துலங்கியது !!

-- தொடரும்

Monday, January 15, 2007

விழுந்தான் வில்லன் - 01

"ஓதுவது ஒழியேல்"
"எண்ணும் எழுத்தும் கண்"
அன்றே சொன்னது
தமிழ் மண் !!

எண்ணற்ற
எண் அற்ற மனிதருக்கு
எஞ்சின வெறும் புண் !!
எனவே இன்றியமையாதது
எண் என
எண் !

வல்லூறு அழிக்க
வளமை கொழிக்க

சூடியும் குறளும்
சூடிய கருத்து
அவை !!
இன்றைய தேதியில்
இன்றியமையாதவை !!

இந்தியனுக்கு
"பட்டால் தான் தெரியும்"
என ஒரு பழக்கம் !!
பட்டுப் பட்டு தெரிவதே
அவன் வழக்கம் !!

தொன் மறைகள்
தொகுத்தளித்த
தகத்தகாயமான கோட்பாடுகளை
இந்தியன் வந்தியன் !
அதனாலேயே அவன்
பல காலம்
பிந்தியன் !!

-- தொடரும்