Monday, November 27, 2006

கொலு - 04

2006_06_16_IMG_1083

தெருவைத் தேடி
போகும் கால் !
போகுங்கால்....

ஊடகமாய் உண்டாகும்
வழிநிறுத்தல் !!
உசுப்பலாய் வரும் பாட்டியின்
வலியுறுத்தல் !!

கூட்டிண்டு போயேன்
சின்னவளை ?!
கிடைக்கட்டுமே அவளுக்கும்
சின்ன வளை ?!
அழுது விறைக்கிறது அவள்
குரல்வளை !

கூட்டம் சேரும் !!
தர்மசங்கடம் நேரும் !!

அடங்கும் ஒரு வழியாய்
ஆரவாரம் !
அடி வைக்கும் வீதியில்
பரிவாரம் !!

பவனி தொடங்கும்!!
கவனி கவனி என
அவனி அடங்கும் !!

கல்லை இடறாதே
நடு ரோட்டில் போகாதே
என
திட்டி தீர்த்து..
வெக்கையில் வேர்த்து...

சீலை தலைப்பை
சிரம் கலைப்பை
சரி பார்த்து..

நுழைந்திடும் கூட்டம்
ஒரு வீட்டினுள்
கை கோர்த்து !!

-- தொடரும்

Tuesday, November 21, 2006

கொலு - 03

2006_10_22_jpg0002

போன தடவை
போகா முடியா
இல்லம் தனை
முதலில் நினை !!
இல்லாவிடில் வைதிடுவர்
உனை !!

ஆக்ஞை இடுவாள்
ஓர்ப்படியாள் !!
அவள் யாருக்கும்
படியாள் !!
மாமியாரின் அடியாள் !!

கோமளா மாமியா?
சியாமளா மாமியா?
யார் வீட்டுக்கு
முதலில்
என ஆரம்பமாகும் உலா !
அக் குழப்பம் காணின்
சிரிப்பில் வலிக்கும்
விலா !!

ஊர் முழுக்க
விளக்கில்லா சந்து !
வாடா துணைக்கு
நந்து !!

அதுவரை பேசாத வாய்
திறக்கும்!
ஆர்வமும் அதிகாரமும்
கலந்து
ஆணை பிறக்கும் !!

வருவானா லேசில்
நந்து ?
அவன் கவனம்
டெண்டுல்கர் அடிக்கும்
பந்து !!

எங்கு எதற்கு என
விளம்ப..
ஏகப்பட்ட பிகுவுக்குப் பிறகு
அவன் கிளம்ப..

-- தொடரும்

Monday, November 13, 2006

கொலு - 02

2006_10_22_jpg0003
மினு மினுக்கும்
சரிகைத் துணியில்
கொலுப் படி !
மண மணக்கும் சுண்டலில்
அடுப்படி !!

செட்டியார் அம்மை
தலையாட்டி பொம்மை

"கணினி கணபதி" என
புதுமை
சங்கீத மும்மூர்த்திகளின்
பதுமை...

பக்தி தீரா
பக்த மீரா..

காவல் வீரர்
நேதாஜி எனும்
தீரர்..

மோப்ப நாய்
கறிகாய்

பல வகை பழங்கள்
பாக்குடைக்கும் கிழங்கள்

கல்யாண கோட்டி
படகோட்டி

என...
வீடு தோறும்
இருக்கும் ஒரு
வரிசை !!
அவ் வரிசையில் தெரியும்
பெண்டிர் தம்
கைவரிசை !!

வண்ணப் பொடி
கலந்த கோலம்
வித்தாரணமாய் போட்டிடுவர்!!
கைத்திறம் காட்டிடுவர் !!

தெருவிற்கு தெரியட்டும் என்
உழைப்பு- என
மாலையில் தொடங்கும்
உற்சாக அழைப்பு !!

-- தொடரும்

Tuesday, November 07, 2006

கொலு - 01

Kolu_2006_09_30_jpg0005

இக் கவிதையில் உண்டு
நடைமுறை வாழ்வில்
நாம் காணும்
வசனம் !!
இலக்கணப் பிழை
இந்து மதம் தாக்கல்
என வேண்டாம்
விசனம் !!

தென்னிந்தியாவின்
தனித்துவம் மிக்க பண்டிகை
தசரா !
அப் பத்து நாளும்
எப் பெண்ணின் கண்ணும்
அசரா !!

பத்து நாள்
விழா !
வீடுதோறும்
மங்கல ஒலியன்றி
வேறு ஓசை
எழா !!

பாய் விரித்த அகம் !
புன்னகை தரித்த
முகம் !
பார்த்தாலே சுகம் !

மண், மரம்,
பீங்கான், பித்தளை
வெள்ளி, வெங்கலம்
என
கண் கவர் பொம்மை
பல வகையில் !
தனவந்தர் வீடுகளில்
தந்தமும் இருக்கும்
மிகை இல் !!

அவை உருவானதோ
பல கையில் !
ஒன்றானதோ
பலகையில் !!

-- தொடரும்