கொலு - 02
மினு மினுக்கும்
சரிகைத் துணியில்
கொலுப் படி !
மண மணக்கும் சுண்டலில்
அடுப்படி !!
செட்டியார் அம்மை
தலையாட்டி பொம்மை
"கணினி கணபதி" என
புதுமை
சங்கீத மும்மூர்த்திகளின்
பதுமை...
பக்தி தீரா
பக்த மீரா..
காவல் வீரர்
நேதாஜி எனும்
தீரர்..
மோப்ப நாய்
கறிகாய்
பல வகை பழங்கள்
பாக்குடைக்கும் கிழங்கள்
கல்யாண கோட்டி
படகோட்டி
என...
வீடு தோறும்
இருக்கும் ஒரு
வரிசை !!
அவ் வரிசையில் தெரியும்
பெண்டிர் தம்
கைவரிசை !!
வண்ணப் பொடி
கலந்த கோலம்
வித்தாரணமாய் போட்டிடுவர்!!
கைத்திறம் காட்டிடுவர் !!
தெருவிற்கு தெரியட்டும் என்
உழைப்பு- என
மாலையில் தொடங்கும்
உற்சாக அழைப்பு !!
-- தொடரும்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home