கொலு - 04
தெருவைத் தேடி
போகும் கால் !
போகுங்கால்....
ஊடகமாய் உண்டாகும்
வழிநிறுத்தல் !!
உசுப்பலாய் வரும் பாட்டியின்
வலியுறுத்தல் !!
கூட்டிண்டு போயேன்
சின்னவளை ?!
கிடைக்கட்டுமே அவளுக்கும்
சின்ன வளை ?!
அழுது விறைக்கிறது அவள்
குரல்வளை !
கூட்டம் சேரும் !!
தர்மசங்கடம் நேரும் !!
அடங்கும் ஒரு வழியாய்
ஆரவாரம் !
அடி வைக்கும் வீதியில்
பரிவாரம் !!
பவனி தொடங்கும்!!
கவனி கவனி என
அவனி அடங்கும் !!
கல்லை இடறாதே
நடு ரோட்டில் போகாதே
என
திட்டி தீர்த்து..
வெக்கையில் வேர்த்து...
சீலை தலைப்பை
சிரம் கலைப்பை
சரி பார்த்து..
நுழைந்திடும் கூட்டம்
ஒரு வீட்டினுள்
கை கோர்த்து !!
-- தொடரும்