மறுபடியும்...
ஆதி நாளில் கோலோச்சிய
ஆசிய அணி
ஒன்று..
ஆழ் கடல் தாண்டிச்
சென்று..
ஆசி அணியுடன்
ஆடவிருக்கிறது
ஆட்டம் !!
ஆசையாய்
ஆர்ப்பரித்து
ஆராய
அலைகின்றது பல
கூட்டம் !!
செளரவ்வா? சேவாக்கா?
லீக்கு பதில்
யார்?
யார் பூசப் போகிறார்
ஆஸி முகத்தில்
தார் ?
யுவ்ராஜா? டிராவிட்டா?
யாருக்கு கத்தி
எனக் கத்தி...
கரகரக்கிறது பலரது
குரல் !
புள்ளி விவரம் காட்டியே
வலிக்கிறது அவர்தம்
விரல் !!
நீள்கிறது பேச்சு
எவர்க்கும் !
கேட்டுக் கேட்டு
வலிக்கிறது
வெறும் சுவர்க்கும் !!
வெள்ளி தோறும்
வருகிறது சண்டை !
உருள்கிறது மண்டை !!
அதி வேகமாய் வீசியும்
ஒரு புல்லைத் தகர்க்கார்
நமது அகர்க்கார் !!
இன்று வரை அவர்
என்னணம் அணியில்
இருக்கார்?
அவர்..
ஓடத் தொடங்கியதுமே
ஹெய்டன் பார்ப்பார் முகிலை !
என்னணம் உருவாக்கும்
எய்யும் பந்து
திகிலை?
மட்டை வீசி செய்யாததை
துட்டை வீசி செய்தாரோ
படேல் !!
என் புத்திக்கு
படேல் !!
இப்படி
பக்கம் பக்கமாய்
பக்கம் பக்கமாய்
போகின்றது பேச்சு !!
கேட்கின்றது ஏச்சு !!
கூப்பிடவுடனே
விரிகின்றது வாதம் !!
சாப்பிட்டவுடனே
செரிக்கின்றது சாதம் !!
யார் பெரியர்
யார் சிறியர்
என செப்பிவிடும்
22 கஜம் !!
அது தான் நிஜம் !!
குத்துச் சண்டை நாளில்
கனவுகளோடு
களம் இறங்குகின்றது
இந்திய அணி !
அடிக்குமா இம்முறை
வெற்றி எனும்
வெங்கல மணி?
Labels: agarkar, australia, brett lee, hayden, india tour, sehwag