Tuesday, May 29, 2007

Walmart - 03

பெருங்களத்தூரின்
பெருமைக்குரிய கடைகளில்
"காந்திமதி ஸ்டோர்ஸ்"
எனும் கடை உண்டு !
எம் குடும்பம்
இன்று வரை
இருந்து வருகிறது
அக் கடையில் வாங்கிய
பொருள் உண்டு !!

தம்மூர் விடுத்து
தாம்பரம் சென்று
மக்கள் தேடுவதா அன்னம்?
இக் கேள்விக்கு விடையாக
அக் கடை நிறுவப்பட்டது
பற்பல வருடங்களுக்கு
முன்னம் !!

அதை நிறுவியவர்
பெரியசாமி நாடார் !!
அவர் நன்னெறியன்றி
வேறொன்றை
எந்நாளும் நாடார் !!

அகவை அதிகமாகாமலே
பெரியசாமி ஒரு நாள்
மறைந்தார் !
மண்ணில் தேக்கிய புகழை
விண்ணில் இறைக்க
விரைந்தார் !!

இன்று
அவர் கடை கல்லாவில்
அவர் மகன்
ஜீவா (எ) சீனி !
கிடைக்கிறது அவனால்
பெருங்களத்தூரில் இன்று
பலரது காப்பிக்கு
சீனி !!

-- தொடரும்

Monday, May 21, 2007

A R Rahman - here is news for you

Well, it turns out, sometimes Kids can find some loose "strings".

I played "Sahana saaral" song from Sivaji this weekend in my car. My 7 year old daughter immediately said, verbatim "the background score is the same as in Mulan".

True enough, its more evident in the Vijay Yesudas version of that song.

Ouch ! Somebody needs to get their act straight.

Friday, May 11, 2007

Walmart - 02

கல கலப்பாய் இருக்கும்
அவ் வீதியில்..
ஒரு பாதியில்...

4 ரூபாயா ஒரு
முழம்?
40 பைசாவா ஒரு
பழம்?

இது ஒரு
கீரையா?
நீ எந்த
ஊரையா?

"சொல்லிக் கொடு"
விலையை !!
மறவாதே "கொசுறாக"
கறிவேப்பிலை இலையை !!

என
கடை தோறும்
தினந்தோறும்

நடக்கும் பேரம்
ரொம்ப நேரம் !!

பிடிக்காத வேலையில்
நாள் முழுதும்
உறங்கி
மாலை 6:30 மணிக்கு
ரயில் வண்டியிலிருந்து
இறங்கி

இக் காட்சியை
இச் சலசலப்பை
இப் பரபரப்பை
பார்த்தால்

மனம்
சலிப்பை மறக்கும் !
சுமையை இறக்கும் !
இறங்கிய சுமை
தானாகவே
இறக்கும் !!

விற்பனையாளன்
வாடிக்கையாளன்
ஒவ்வொரு முகமும்
காட்டும் ஒரு
ரசத்தை !!
அக் காட்சியில்
இதயம் இழக்கும்
வசத்தை !!

-- தொடரும்