Tuesday, October 24, 2006

நேசக் கரம் - 07

மனிதனே !!
"நல்லோர் வாழ்வர்
புல்லோர் வீழ்வர்"
எனும் உறுதியை
தேக்கு !
உறுதியாய் இருப்பதால் தான்
புகழ் கொண்டிருக்கிறது
தேக்கு !!

தெளி !
அன்பைத்
தெளி !!
சுருங்கிய மனம் ஆகட்டும்
வெளி !!

என் கவலை..
பணமும் உதவியும்
நலிந்தோரை மட்டும்
விரைவில் அடையட்டும் !!
அவர்கள் தளை
உடையட்டும் !

இருக்கலாம்
எவர் செயலிலும்
கள்ளங் கபடமற்ற
தோற்றம் !!
ஊடுருவிப் பார்க்கின்
நுகரலாம்
குடலைக் குலைக்கும்
நாற்றம் !!

நாம் வேண்டுவது
ஆப்பிரிக்க நாடுகளின்
ஏற்றம் !!
தேவையில்லை நமக்கு
யார் பெரியர்
யார் சிறியர் எனும்
சீற்றம் !!

"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்"
குறள் வாக்கியம் !!
பெருஞ் செல்வந்தர்களின்
பெருஞ் செயல்களால்
பெறட்டும் ஆப்பிரிக்கா
பெறர்க்கரிய பாக்கியம் !!

ஆப்பிரிக்காவுக்கு அமைதி
வாய்க்கட்டும் !
அவனி அன்று
அவதூறு சொல்வார்
வாய் கட்டும் !!

-- முற்றும்

நேசக் கரம் - 06

பிரசித்தமானது அவரது
ஆண்டகை !
போற்றத்தக்கது அவரது
பெருந்தகை !!
அறியாமல் ஆராயாமல்
கொடுக்காது Buffettன்
கை !
காரணம் அவர் ஒரு
Tough guy !!

ஆனால்....
தெரியாதா உலகுக்கு
Gatesன்
உண்மை வண்ணம்?
அவர்க்கு உண்டு
தன்னேற்ற எண்ணம் !!

என..
பலர்க்கு இருக்கலாம்
மனக்கிலேசம் !
ஆவேசம் !!
அவர்கள் அளவில் இது
Gatesன் வேசம் !

விடைகளை நான் அறியேன்!
அறிவதற்கான வெறியேன் ?

-- தொடரும்

Tuesday, October 17, 2006

நேசக் கரம் - 05

warren-buffett

Gatesன் நண்பர்
Warren Buffett !
Berkshire Hathaway
எனும் நிறுவனத்துக்கு
முதல்வர் !!
"Sage of Omaha" என
போற்றப்படும் தவப்
புதல்வர் !!

நிர்வாகயியலில்
அவரது பெயர்
பிரபலம் !!
ஆர்வலர் யாவருக்கும்
உண்டாகும்
அவர் போல்
அணி சேர்க்கும்
சபலம் !!

பங்கு வர்த்தகத்தில்
Buy and Hold
எனும் "முதலீட்டு தத்துவம்"
உண்டு !!
இவர் இதனை
கரைத்துக் குடித்தவர்
மொண்டு !

ஒரு நிறுவனத்தின் பங்குகளை
Buffett
வாங்குகிறார் என்றால்
பங்குச் சந்தையே ஏறும் !
விற்கிறார் என்றால்
நிலைமை தலை கீழாய்
மாறும் !!
அந்நிறுவனத்தை
Wall Street
காறும் !!

செய்தி நிறுவனங்கள்
நொடிப் பொழுதும்
Buffettன் பெருமை
கூறும் !!
பல்கலைக் கழகங்கள்
வாசிக்கின்றன
அவர் பெருமையை
நாள் தோறும் !!

Buffett
உலகின் இரண்டாவது
பெரும் தனவந்தர் !!
நற்செயலுக்கு இவரும்
முன்வந்தர் !!

வயது முதிர்ந்தவர் !
பஞ்சமும் பட்டினியும்
புவியில் புரியும்
அவலம் கண்டு
அதிர்ந்தவர் !!

தன் சொத்தை
Gatesன் அறக்கட்டளைக்கு
தானமாக தரப்போவதாக
மொழிந்தார் !
அன்பைப் பொழிந்தார் !!

-- தொடரும்

Friday, October 13, 2006

நேசக் கரம் - 04

ph_lg_gh_mozam_melindabill

காலப் போக்கில்
காணாமல் போயின சில
நிறுவனம் !!
அவை கொண்டிருந்தன
உள்நோக்கம் கொண்ட
சிறு மனம் !!

செஞ்சிலுவைச் சங்கத்துள்ளும்
ஊழல் !!
யாரையும் நம்ப முடியாத
சூழல் !!

அப்போது நுழைந்தது
ஒரு அறக் கட்டளை
மின்னலாய் !!
அதன் அதிபர்
உலகின் கட்டுப்பிடிகளை
தகர்த்தவர்
"ஜன்னல் ஜன்னலாய்" !!

அது தான்
Bill and Melinda Gates
Foundation !
தருகிறது தானாய்
தாராளமாய்
வாடிய பல Nationக்கு
Ration !!

-- தொடரும்

Monday, October 09, 2006

நேசக் கரம் - 03

பஞ்சமும் வறுமையும்
அவலத்தின் ஆதி!
அவை குறையின்
துயர் மறையும் பாதி !!

தொடரலாகாது இனியும்
தரித்திரம் !!
மாற்றிட வேண்டும்
சரித்திரம் !!

ஆப்பிரிக்காவின் பெருமை
மழைக் காடுகள் !!
அவற்றை
துவம்சம் செய்கின்றன
மேலை நாடுகள் !!

அவர்களின் இன்றைய தேவை
கல்வி ஏடுகள் !
அவை நீக்கும்
நாளைய சந்ததியினரின்
வறுமைக் கோடுகள் !!

என ஒட்டுமொத்தமாக
அவை ஆமோதித்தன !
ஆவன செய்ய
ஆலோசித்தன !

வறுமைக்கு எதிரி
கட்டிலடங்கா பணம் !!
அப் பணத்தை
தருவதற்கு தேவை
தயாள குணம் !!

நோய்க்கு
முதலில் மருந்து !
வாய்க்கு
பிறகு விருந்து !!

நீட்டிடுவோம்
நேசக் கரம் !
தொடங்கட்டும்
நல் அறம் !!

என அவை முடிவு
செய்தன !!
முடிவை செயலாக்க
வழியை நெய்தன !!

-- தொடரும்

Monday, October 02, 2006

நேசக் கரம் - 02

திரும்பிய இடமெங்மும்
அமர் களம் !!
விளைத்தன அவை
அளவொண்ணா
அமர்க்களம் !!

பார்க்குமிடமெங்கும் பஞ்சம் !
பதை பதைத்தன பார்த்தோர்
நெஞ்சம் !!

என்ன செய்ய?
எதனை முதலில் கொய்ய?
என
பல முகம் தொய்ய...

பல நிறுவனங்கள்
நாடுகளின் தலைமை
ஆராய்ந்தன ஆப்பிரிக்காவின்
நிலைமை..

டயேரியா
மலேரியா என
நோய் தாக்கி
பல உயிர் மரிக்கிறது !
அனுதினமும் மன்பதை
சோகத்தை தரிக்கிறது !!

மக்கள் மனதில் இல்லை
லவலேசமும் கள்ளம் !!
ஆயினும் பொங்கி ஓடுகிறது
ரத்த வெள்ளம் !!

சோகம் அடங்க
எங்கு தொடங்க ?

அனுதினமும் அவை
யோசித்தன !
ஆய்வாளர் பலர்
புத்தகத்தை வாசித்தன !!

-- தொடரும்