Tuesday, December 26, 2006

கொலு - 09

2006_11_25_IMG_1381

சுண்டலை பிடி
பிடித்து...
பிடித்தது போல்
நடித்து..

தாம்பூலம் வாங்கி
ஆசிகள் தாங்கி

கிளம்பத்
துணிகையில்
துணி கையில் !!

வசதிக்கேற்ப சிலருக்கு
பட்டு சேரும் !!
சிலருக்கு Blouse
Bit சேரும் !!

சிலருக்கு
துட்டு சேரும் !!
பலருக்கு
புட்டு சேரும் !!

நவராத்திரி தொடங்குவது
மகாளய அமாவாசை
முடிந்து !!
வைத்திருக்கிறது அது
உலகியல், உளவியல்
பொருளியல், மனவியல்
காரணங்களை
முடிந்து !!

கோடையின் ஆட்டம்
முடிந்ததும் வருகிறது
Autumn !
குப்பையாகி விடுகிறது
தோட்டம் !!

மரங்கள் சிலையாய் இருக்கும்
இலையுதிர் காலத்தில் !!
நரம்புகளாய் இருக்கும்
கிளைகள் பார்த்து
தோன்றும் ஒரு வெறுமை
சீலத்தில் !!

சீக்கிரமே ஆகிவிடும்
சூரியனின் அத்தமனம் !
அடங்கி விடும்
மொத்த மனம் !!

சில சமயம்
மழையும் சேரும் !!
நிரம்பிக் கிடக்கும்
குழையும் சேறும் !!

சுவர்களில் தெரியும்
ஓதம் !!
சில சமயம் இருக்கும்
சீதம் !!

அடிக்க முடியுமா சுவருக்கு
வண்ணம் ?
மாறும் அந்த எண்ணம் !!

கை நற நறக்கும் !!
புதுசாக ஏதாவது செய்ய
பர பரக்கும் !!

விடுமுறை எடுத்து
போக முடியாது
தில்லி !
பிள்ளைகளுக்கு உண்டு
பள்ளி !!

நவராத்திரி முடிந்ததும்
தீபாவளி, கார்த்திகை
பொங்கல் என
உண்டு பல
பண்டிகைகள் !
பணத்தை இறைக்க
முன்வருமா கைகள்?!

ஆயினும்....
வாழ்க்கை ஓடுவதற்கு
தேவை ஒரு
உந்து சக்தி !!
அதை தருகிறாள்
துர்கை எனும்
இந்து "சக்தி" !!

பந்துக்கள்..
பாயசம்..
பாசுரங்கள்..

ஆயுதத்தை வணங்கி
பொட்டிடும் விசேடம்..
கண்ணனாய் அர்சுனனாய்
அழகான வேடம்..
சரஸ்வதி பூசையன்று
மூடி வைக்கப்படும்
பாடம்...

என..
பத்து நாள் முடிவில்
மன இருள் நீங்கி உற்சாகம்
நிலவும் !
காரிருள் நீக்க வந்திருக்கும்
பத்து நாளைய
நிலவும் !!

-- முற்றும்

கொலு - 08

2006_11_24_IMG_1357

பார்த்தனை பார்த்தனை !!
கீதை வார்த்தனை !
குறை தீர்த்தனை !!
என
கண்ணனையும் இழுக்கும்
கீர்த்தனை !!

காதை ஆட்டியதற்கு
கிடைக்கும் பலன் !!
கேள்வி கேட்க வைக்கும்
அணிகலன் !!

உன் பாட்டுக்கு
எச் செவி தான்
உருகா?
காதில் என்ன
புது "திருகா"?

வரும் கேள்வி !
அதற்குத் தானே
இத்தனை வேள்வி ?!

-- தொடரும்

Tuesday, December 19, 2006

கொலு - 07

2006_11_24_IMG_1376

"இங்கேயும் அதே பாட்டு
பாடாதே !
எழுந்து போயிடுவேன்
தேடாதே" !!

இளசு
தாயை கட்டும் !
மோவாயை நொட்டும் !

வெட்கி விலகி
தொடங்கும் கிருதி !
சேரும் சுருதி !!

மால் மருகா
கோல முருகா
என
கொடி கட்டும்
உச்சஸ்தாதியில்
பிருகா !!

"ஷீணமை திருகா"
என சிலமுறை கேட்கும்
தெலுங்கும் !!
க்ருதி யாருடையதாயினும்
காது மட்டும்
சுதா பாணியில்
குலுங்கும் !!

-- தொடரும்

Monday, December 11, 2006

கொலு - 06

2006_06_16_IMG_1065

"வா! வா!
எத்தனை நாளாச்சு?
எப்போதும் உன்
பேச்சு" !

எப்படிடா இருக்கே
நந்து?
எவ்வளவு பெரிய
பெண்ணாயிட்டா இந்து?

என ஆரம்பிக்கும்
உபசாரம்
கண்ணில் தெரியும்
நெஞ்சின் ஈரம் !

வரும் பதில் !
அன்பு தெரியும்
அதில் !!

செளக்கியமா?
கோயில் குளம்னு
ஆயிட்டே நீ
ஐக்கியமா!

வியாகுலம்
சிந்தாகுலம்
பிள்ளைகளின் குருகுலம்
இடுப்பின் அங்குலம்
என சகலமும்
விசாரிக்கப்படும் !
கடிகாரம் எட்டைத்
தொடும் !!

பாடேன் ?! பாடேன் ?!
அழைப்பு வரும் !!
பாடேன் !! பாடேன் !!
மறுப்பு வரும் !!

-- தொடரும்

Monday, December 04, 2006

கொலு - 05

2006_06_16_IMG_1056

"வெளியில் போடாதீர்
செருப்பை" !
ஏற்றிருப்பார் வீட்டுக்காரர்
ஏகாந்த பொறுப்பை !!

அவரிடமிருந்து வரும்
அறிவுரை !
அகண்ட விரிவுரை !!

சுற்றுகிறது ஒரு
நாய் !
செருப்பை பருப்பாக
பார்க்கிறது அதன்
வாய் !!

காட்டுக் கத்தல்
கத்துவார் !
நாயைப் பார்த்தால்
எத்துவார் !!

சத்தம் கேட்டு
வருவாள் கோமளம் !!
கழுத்தில் மினுமினுக்கும்
சியாமளம் !!

-- தொடரும்