கொலு - 09
சுண்டலை பிடி
பிடித்து...
பிடித்தது போல்
நடித்து..
தாம்பூலம் வாங்கி
ஆசிகள் தாங்கி
கிளம்பத்
துணிகையில்
துணி கையில் !!
வசதிக்கேற்ப சிலருக்கு
பட்டு சேரும் !!
சிலருக்கு Blouse
Bit சேரும் !!
சிலருக்கு
துட்டு சேரும் !!
பலருக்கு
புட்டு சேரும் !!
நவராத்திரி தொடங்குவது
மகாளய அமாவாசை
முடிந்து !!
வைத்திருக்கிறது அது
உலகியல், உளவியல்
பொருளியல், மனவியல்
காரணங்களை
முடிந்து !!
கோடையின் ஆட்டம்
முடிந்ததும் வருகிறது
Autumn !
குப்பையாகி விடுகிறது
தோட்டம் !!
மரங்கள் சிலையாய் இருக்கும்
இலையுதிர் காலத்தில் !!
நரம்புகளாய் இருக்கும்
கிளைகள் பார்த்து
தோன்றும் ஒரு வெறுமை
சீலத்தில் !!
சீக்கிரமே ஆகிவிடும்
சூரியனின் அத்தமனம் !
அடங்கி விடும்
மொத்த மனம் !!
சில சமயம்
மழையும் சேரும் !!
நிரம்பிக் கிடக்கும்
குழையும் சேறும் !!
சுவர்களில் தெரியும்
ஓதம் !!
சில சமயம் இருக்கும்
சீதம் !!
அடிக்க முடியுமா சுவருக்கு
வண்ணம் ?
மாறும் அந்த எண்ணம் !!
கை நற நறக்கும் !!
புதுசாக ஏதாவது செய்ய
பர பரக்கும் !!
விடுமுறை எடுத்து
போக முடியாது
தில்லி !
பிள்ளைகளுக்கு உண்டு
பள்ளி !!
நவராத்திரி முடிந்ததும்
தீபாவளி, கார்த்திகை
பொங்கல் என
உண்டு பல
பண்டிகைகள் !
பணத்தை இறைக்க
முன்வருமா கைகள்?!
ஆயினும்....
வாழ்க்கை ஓடுவதற்கு
தேவை ஒரு
உந்து சக்தி !!
அதை தருகிறாள்
துர்கை எனும்
இந்து "சக்தி" !!
பந்துக்கள்..
பாயசம்..
பாசுரங்கள்..
ஆயுதத்தை வணங்கி
பொட்டிடும் விசேடம்..
கண்ணனாய் அர்சுனனாய்
அழகான வேடம்..
சரஸ்வதி பூசையன்று
மூடி வைக்கப்படும்
பாடம்...
என..
பத்து நாள் முடிவில்
மன இருள் நீங்கி உற்சாகம்
நிலவும் !
காரிருள் நீக்க வந்திருக்கும்
பத்து நாளைய
நிலவும் !!
-- முற்றும்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home