நேசக் கரம் - 07
மனிதனே !!
"நல்லோர் வாழ்வர்
புல்லோர் வீழ்வர்"
எனும் உறுதியை
தேக்கு !
உறுதியாய் இருப்பதால் தான்
புகழ் கொண்டிருக்கிறது
தேக்கு !!
தெளி !
அன்பைத்
தெளி !!
சுருங்கிய மனம் ஆகட்டும்
வெளி !!
என் கவலை..
பணமும் உதவியும்
நலிந்தோரை மட்டும்
விரைவில் அடையட்டும் !!
அவர்கள் தளை
உடையட்டும் !
இருக்கலாம்
எவர் செயலிலும்
கள்ளங் கபடமற்ற
தோற்றம் !!
ஊடுருவிப் பார்க்கின்
நுகரலாம்
குடலைக் குலைக்கும்
நாற்றம் !!
நாம் வேண்டுவது
ஆப்பிரிக்க நாடுகளின்
ஏற்றம் !!
தேவையில்லை நமக்கு
யார் பெரியர்
யார் சிறியர் எனும்
சீற்றம் !!
"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்"
குறள் வாக்கியம் !!
பெருஞ் செல்வந்தர்களின்
பெருஞ் செயல்களால்
பெறட்டும் ஆப்பிரிக்கா
பெறர்க்கரிய பாக்கியம் !!
ஆப்பிரிக்காவுக்கு அமைதி
வாய்க்கட்டும் !
அவனி அன்று
அவதூறு சொல்வார்
வாய் கட்டும் !!
-- முற்றும்