நீ எந்த ஊரு ?
எதிரில் உள்ளோர்
எம்மவர் !!
நாடு கடத்தினும்
நசிவுற நடத்தினும்
நமக்கு அவர்
நம்மவர் !!
என் வாளியை
எந்நாளும் அவர் மீது
எய்யேன் !!
செய்யத்தகாதன செய்யேன் !!
கிரீடி குருஷேத்திரத்தில்
கூக்குரலிட்ட மாத்திரத்தில்
பார் உய்ய
பார்த்திபனை முன்னிறுத்தி
யாதவ மன்னன்
மாதவ கண்ணன்
மானுடத்துக்கு கொடுத்தான்
மகத்தான அறிவுரையை
புதிய பாதையாய் !!
பகவத் கீதையாய் !!
”சர்வத்தை கெடுக்கும்
கர்வத்தை விடு !!
பலனை என்னிடம் விட்டு
பாணத்தை தொடு !!
யான் எனதெனும் சிந்தை
மனநோய்க்கு தந்தை !!”
எளிய வார்த்தையில் பித்தம்
தெளிய உரைத்தான்
திகிரி தாங்கிய
தேவகி புத்திரன் !!
உள் வாங்கியதும்
உணர்ந்தான் தவறை
உடனிருந்த மித்திரன் !!
”தான்” எனும்
தலைக்கேறிய தருக்கு..
தரணியில் பலருக்கு
தற்போது இருக்கு !!
அங்கு தொடங்குகிறது
அவர்தம் கிறுக்கு !!
முதன்மை நடிகராய்
மும்பையில் ஷாரூக் கான்
முன்னோடி என்றாலும்
எதிர் பார்க்கலாமா அவர்
எதிர்த்துக் கேட்கா வரவேற்பை
பிற நாட்டில் நீர்
பிரதான பிரஜையா ?
பிறிதொரு பிரஜையா ?
நீட்டா அம்பானியோடு
நீர் வாங்க வந்தது
Chubb Fellow பட்டத்தை !!
பழுது பார்க்கலாகாது அதற்காக
பரிசோதனைச் சட்டத்தை !!
திரித்து பேசாதீர் அதனை
சாதி வெறி என்று !!
அறிந்தோர் சொல்லுவார்
அமெரிக்கர் செய்தது
நீதி நெறி என்று !!