Thursday, November 10, 2011

ஆதமிண்டே மகன் அபு..



வேதமாய்
நாதமாய்
பூதமாய்

வெளியாய்
ஒளியாய்

தன் மதம் பெரிதெனும்
தப்பட்டை விடுத்து..

முன் வினை களை
முக்கண்ணனே என
முப்பட்டை கொடுத்து..

இறைவனாய் சிவனை
இந்து மதம் வழிபடுகிறது
நடு நாயகமாய் !!

அல்லா அல்லா என
அல்லா அல்லாரை
அழகுற ஒதுக்கி

அல்லா! அல்லா! என
அனுதினம்
அஞ்சு முறை
அல்லாவை

தினமும் இசுலாம்
திசை பார்த்து தொழுகிறது
நபிகள் நாயகமாய் !!

மெக்காவினின்று
மெதீனா வரை

நடையாய் நடந்து
நபிகள் பட்ட துயரத்தை..
அதன் மூலம்
அவர் தொட்ட உயரத்தை..

அடைய வேண்டும் என
அத்தர் விற்கும் ஒருவர்
அனுதினம் விழைகிறார் !!

தள்ளா வயதிலும்
தல யாத்திரையே தனது
தலையாய கடமை என

பிரயாண அலுவலில்
நுழைகிறார் !!




அவர் விழையும்
அப் பயணம்

அண்டம் காப்பவனுக்கு
அவரவர் செய்யும்
அர்ப்பணிப்பு என

அவனியார் விவரிப்பர்
ஹஜ்ஜை !!

அவருக்கு
அதன் மீது
அதீத லஜ்ஜை !!

இசுலாம் மதத்தின்
இரட்சணியம் சார்ந்த
இறையுணர்வின் புனிதத்தை..

இந்தியர்க்கே உள்ள
இன்றியமையா மனிதத்தை..

தல யாத்திரையின்
தனிச் சிறப்பை..
அதற்குத் தேவையான
அனேக துறப்பை..

இயல்பு வாழ்க்கையில்
இழையோடும்
இயலாமையை..

வர்த்தக தாகமின்றி..
வகுப்புவாத மோகமின்றி..

மாசின்றி மாண்புடன்
மனதை வருட படைத்து..

நடப்பவை நன்மைக்கே என
நம்பிக்கையோடு
நம் கண்ணீர் துடைத்து..

தேசிய விருது
வாங்குவதற்கில்லை
வழங்குதற்கு என
எச்சரித்து….

எந்தா மோனே ?!
எங்ஙன உண்டே
எண்டே படம்? என
எம்மவரை நச்சரித்து…

வியத்தகு படைப்பாய்
வியப்பில் ஆழ்த்தியது

மலையாள மொழியில்
மனதை கொள்ளை கொண்ட
மகத்தான ஓர் சித்திரம் !!

ஆடுகளம்
அதன் முன்
எத் திறம் ?!

தந்த பாத்திரத்தில்
தனது பங்கை உணர்ந்து..

விழியில்
விசும்பலில்
வலியை கொணர்ந்து..

தகுதியை நிரூபித்திருக்கிறார்
தங்கு தடையின்றி
சலீம் குமார் !!

மன்மதன் அம்பு
“நாயகன்” முதல்
மங்காத்தா நாயகன் வரை

அவர் முன்
அனேகர் சுமார் !!

தரங் கெட்டு
தமிழ்ப் படம் கிடக்கிறது
தரிசாக !!

ஆர்ப்பரித்து சொல்கிறேன்
ஆஸ்கார் கிடைக்கட்டும்
“ஆதமிண்டே மகன் அபு”விற்கு
பரிசாக !!

Labels: , , , , ,