Tuesday, September 06, 2011

iPray



நிலத்தார் தவிக்கிறார்
நிந்தன்
நினைப்புற்று !

நிராதரவாக்கி இருக்கிறது
நினைப் புற்று !!

திரும்பும் இடமெல்லாம்
திரும்புவாரா பதவிக்கு
திரும்பவும் Jobs என

உறங்கத் தவிக்கிறது
இணையம் !
உற்ற தாக்குதலில்
உரக்கத் துடிக்கிறது
உந்தன் கணையம் !!

அன்பரே !
அதி விரைவில் நலமுறுக !
பிராந்தியங்கள் உனக்காக
பிரார்த்திக்கின்றன மனமுருக !!

iTunes
iPod
iPad
iPhone

அவை மறந்து
அவனியார் கிடக்கிறார்

அடுத்து யாது? என
அதி மோனத்தில் !
iPray என தியானத்தில் !!

Labels: , , , , , , ,