Friday, February 25, 2011

பூங்காற்று திரும்புமா . . .



வான் ஏறி விட்டது
வானம்பாடி !!
”வான் மேகங்களே” என
கானம் பாடி !!

அன்பர் மலேசியா வாசுதேவன்
அமரர் ஆகிவிட்டார் !!
அவரொத்த பாடகர்
அனேகர்க்கு கிட்டார் !!

தமிழ்ப் பாடகர் வரிசையில்
தமக்கென்று வழி அமைத்து
தனித்து நின்றவர் !!
தடையின்றி வென்றவர் !!

விவரிக்க முடியாது
விலாவாரியாக அவர் பங்கை !!
ஆயிரம் ஆயிரம் பாடல்களில்
ஆதாரத்திற்கு ஒன்றென்றால்
ஆர்ப்பரித்துச் சொல்வேன்
“ஆகாய கங்கை” !!

முதலில் இருந்து
முடிவு வரை
முதல் மரியாதையின் சுவாசம்
வெட்டி வேரு வாசம் !!

கேட்ட நாள் முதலாய்
கேள்வியின்றிக் கிறங்கியது
தமிழர் தேசம் !!

பாட்டு போடும் வண்டியாக
பார்த்து ஏறும் அளவிற்கு

வெகுநாளாய் என் நண்பன்
வெங்கட்டிற்கு உண்டு
வெறித்தனமாய் அதனில் நேசம் !!

கோடம்பாக்கத்தில் இந்நாள்
கோடியாய் வருகின்றார் பலர்

பாடிய வரை போதும்
”பருவாயில்லை” என
வடக்கிலிருந்து ”உதித்து” !!

பழகிக் கொள்கின்றார்
”பருவாயில்லை” என தமிழரும்
பாழும் அவரது
பாட்டைத் துதித்து !!

நம் இசையமைப்பாளர் பலர்
நம்மிடையே இல்லை
நம்மவரை மதித்து !
வாசுதேவனை ஒத்த ஒருவர்
வர வேண்டும் இனி உதித்து !!

”செங்காட்டு மண்ணும்
நம் வீட்டு பொண்ணும்…”

காதில் விழும் சங்கதிகள்
நம்மை ஏதோ பண்ணும் !!
அப்பாடல் கேட்கும் போதெல்லாம்
அமரர் வாசுதேவனை
அடியேனது உள்ளம் இனி
அடிக்கொருதரம் எண்ணும் !!

Labels: , , ,