சேப்பாக்கம்...சேவாக்....
சேவாக்...
சாதித்திருக்கிறான் மற்றும்
ஒருமுறை !
என்னிடம் இல்லை
ஒரு உரை !!
கழிக்க வேண்டும்
அவனுக்கு கண் ஊறு !!
காரணம் முந்நூறு !!
முல்தானில் தொடங்கிய
சுல்தான்
அடிக்க அடிக்க
முந்தைய சாதனைகளை
பொடிக்க பொடிக்க
ஊரார் வாயெல்லாம்
பல் தான் !!
எவர் பேச்சிலும்
உனைப் பற்றிய
சொல் தான் !!
உன்னை வேண்டுகிறேன்
சென்னை சார்பாக
ஏவாக் குமரியும்
நோவாக் கிழவியும்
கேவாக் குழந்தையுடன்
சேவாக்கை காண..
சேப்பாக்கத்துள் நாளை
இருப்பர் வியர்த்து !
அவருக்காக 400
எட்டி மட்டை
உயர்த்து !!
Labels: chepauk, multan, sehwag, sultan, world record