Tuesday, June 26, 2007

Walmart - 06

கீழ்த்தர வர்க்கம்
அவர்கட்கு விலக்கு
நடுத்தர உயர்தர வர்க்கம்
இவையே Wal Martன்
இலக்கு

இவர்கள் இருப்பது
நகரத்தில் !!
நகரத்தை மட்டும் ஆதரித்து
பிறவற்றை புறக்கணித்தால்
Wal Mart ஏந்தும் ஓடு
தகரத்தில் !!

பட்டியலிட்டு
பகலில் சென்று
தேவையானவற்றை வாங்கி
தேவையில்லாதன பார்த்து
ஏங்கி....

மொத்தத்தில்
வாங்கிடுதல் ஆகிவிடலாம்
பூர்த்தி !!
இல்லுக்கு எடுத்துச் செல்ல
நிறையவே வேண்டும்
நேர்த்தி
நடுத்தர வர்க்கத்து மக்களிடம்
ஏது ஊர்தி?

Wal Martன் பலம்
distribution எனும்
பொருள் வினியோகம் !
அதனால் தான்
அது அடைந்தது
உலகளவில்
பெரும் யோகம் !!

Wal Mart வேகத்துக்கு
என்னணம் ஈடு கொடுக்கும்
இந்திய சாலை ?
முக்கு மூலை
தேடித் தேடி
தோண்டுவதே இங்குள்ளோர்
வேலை !

-- தொடரும்

Friday, June 15, 2007

Walmart - 05

இத்தனை நாள்
இக்கடை
இல்லையே ?
இருந்திருந்தால்
இருந்திருக்காது
முட்டு வலிக்கான
வில்லையே.....

ஆஹா
எத்துணை சுகம்?
என
எண்ணும் மனம் !
வெகு தொலைவில் இல்லை
அது நடக்கும் தினம் !!

இந்தியாவுக்கு வரப் போகிறது
Wal Mart !
நிற்குமா இதனால்
இந்தியாவில் பலருக்கு
Heart ?

Wal Mart வரவு
நல்வரவா?
தொந்திரவா?

இக் கேள்வியால்
இற்றை நாளில்
இந்தியா எங்கும்
சச்சரவு !!
சொல்கின்றனர் பலர்
Wal Mart ஒரு
நச்சரவு !!

Wal Martக்கு தேவை
நிறைய இடம் !
இந்தியாவில்
இன்றைய தேதியில்
இடம் தான் பலருக்கு
விடம் !!

-- தொடரும்

Tuesday, June 05, 2007

Walmart - 04

சீனி எனது
நண்பன் !
தோழமையிலும் தொழிலிலும்
நற் பண்பன் !!

100 கோடி
இந்திய மக்களின் சீவனம்
அவர் தம்
மாடுகளுக்குத் தீவனம்

சீனி கடை ஒத்த
பல்லாயிரக் கணக்கான
கடைகளை நம்பி !
குடை விரிக்க
வரவிருக்கிறது ஒரு கடை
இவர்களை நெம்பி !!

சாப்பிடும் ரவை முதல்
சுடும் ரவை வரை

அக் கடையில்
கிடைக்கும்...
நம்பலாம் அக் கடையை
எக் கேள்விக்கான
விடைக்கும்..

போதாததற்கு ஒரு
பகுதியே
ஒதுக்கப் பட்டிருக்கும்
கிடைக்கும் விடைக்கும் !!

பொருட்களை
நாமே எடுக்கலாம் கையில்
போட்டுக் கொள்ளலாம்
பையில்

இன்னும் இன்ன
பிற வசதிகள் !!
காணாமல் போகும்
கடைக்குப் போகின் வரும்
அசதிகள் !!

-- தொடரும்