Monday, July 23, 2007

Walmart - 09

தன் போக்கினின்று
மாற அவை
மறுக்க
Wal Martஆல் முடியவில்லை
பொறுக்க

விழைகிறது அது
"விநியோகச் சங்கிலி"யினின்று
அவர்களை அறுக்க
அல்லது இறுக்க

விற்பனையும் நான்
வினியோகமும் நான்
விரைவில் நாளை
விளைவிக்கவும் நான்

இது தான்
Wal Martன் உத்தேசம் !!
இதை வைத்துத் தான்
அது வந்திருக்கிறது
இத் தேசம் !!

மேலும்..
தொழில் நுட்பத்தால்
சில்லறை விற்பனை பெறும்
பெரும் வளர்ச்சி !!
RFID என்பதன் மூலம்
மேலும் மேலும்
வரவிருக்கிறது கிளர்ச்சி !!

தன் தொழில்நுட்ப
வாளை
இந்திய இளைஞனின்
மூளை

சாணை பிடிக்க..
அது
உலக வர்த்தகத்திற்கு
தடையாய் இருக்கும்
தூணை பொடிக்க..

ஒரு கிளர்ச்சியையே
கொண்டு வரும்
Wal Martன் வருகை !!
அதற்கு தருவோம் நாம்
இரு கை !!

-- முற்றும்

Wednesday, July 11, 2007

Walmart - 08

Wal Mart வரவில்லை
பொருள் விற்க
அவர்கள் பிரயத்தனப்படுவது
இந்தியாவை கற்க

கிழக்காசிய நாடுகளில்
பன்னாட்டு நிறுவனங்கள்
மூலைக்கு மூலை
தோன்றியிருக்கின்றன !!
காலை ஊன்றியிருக்கின்றன !!

Saralee போன்றவை
நெய்கின்றன சேலை
Rockport போன்றவை
செருப்பாக்குகின்றன தோலை

ஏற்றுமதி இல்லையேல்
மூடப்பட்டுவிடும் அவர்தம்
ஆலை !!
அதற்கு அவர்கள்
நம்பியிருப்பது
DHL, FEDEX, UPS, Maersk
போன்றோரது வேலை !!

"விலையைக் குறை! - இல்லை
விரைவாய் மறை"
என்பது Wal Martன்
ஆதாரத் தத்துவம் !!
அடைந்தது அது
அதனால் தான்
மகத்துவம் !!

ஏறுமுகமாய்
ஏற்றுமதி விலை
இருக்க
ஏக மனதாய்
அதன் மென்னியைத்
திருக்க

Wal Martக்கு விருப்பம் !!
தேவை அதற்கொரு
திருப்பம் !!

-- தொடரும்

Monday, July 02, 2007

Walmart - 07

Wal Martக்கு
விற்பனையாகும் பொருளுக்கு
வேண்டும் காசு (அ)
கிரெடிட் கார்டு உடனுக்குடன் !!
நம்மில் பலர்
நம்பியிருப்பதோ
"நோட்டில் குறிச்சுக்கோ"
எனும் கடன் !!

Wal Mart மூலம்
தரக் கட்டுப்பாடு
உயரும் !!
மறையும் "எடை சரிதானா"
போன்ற துயரும் !!

விலை மலியும் !
நடுத்தர வர்க்கத்து
மக்களின் முகம்
மேலும் பொலியும் !!

இருக்க முடியாது
இனி பல கடைகள்
ஈ ஓட்டி !!
விற்பனையில் வரும்
கடும் போட்டி !!

இங்ஙனம்
இரு தரப்பு வாதமும்
விரிகின்றன !!
இரு பக்கமும்
நியாயம் தெரிகின்றன !!

என் கருத்து
வேறானது !
சிறிது மாறானது !!

-- தொடரும்