எழுத்தென்பது யாதெனின். . . .
நடந்திருக்கிறது
நயத்தகு செயலொன்று
நவீன உலகில் !!
நகர்த்தியிருக்கிறது அது
நம்மவரை முதலாமவராக
”நவீன” உலகில் !!
இலக்கிய உலகில்
இறவாப் புகழில்
இந்தியாவை
இருக்க வைத்திருக்கிறது
இன்னுமொரு விருது !!
இந்தியனே!
இமாலய சாதனையாக
இதனை
இன்றே கருது !!
அவ்விருதின் பெயர் ”புக்கர்” !!
அங்கீகாரம் கிடைக்கா
அவத்தையில்
அதைப் பெற்ற எவரும்
அணுவளவும் சிக்கர் !!
நம்மவரும்
நமது வம்சாவளியினரும்
நாற்பது வருடத்தில்
நான்கு முறை
நற்பரிசதனை பெற்றிருக்கிறார் !!
பெரும் புகழ் உற்றிருக்கிறார் !!
நேய்பால்
சல்மான் ருஷ்டி
அருந்ததி ராய்
கிரண் தேசாய்
அவ்வரிசையில் இன்று
அரவிந்த் அடிகா
அடியொற்றியிருக்கிறார் !!
அரிய பரிசை பற்றியிருக்கிறார் !!
வெறும் பகடைக் காயாக
வெகு சனத்தை
வெறுப்போடு ஆளும்
வெற்று அரசியலாட்சியை
வெளுத்து வாங்குகிறது
“வெள்ளைப் புலி” !!
கடைசிப் பத்தி வரை
கட கடவென படித்து
கண் மூடினால் மனமெங்கும்
கொள்ளை வலி !!
இந்தியா என்றவுடன்
இமை மூடும் நேரத்தில்
யோசனை யானையும்
வாசனை சந்தனமும்
சல்லிக் கட்டும்
சிற்பமும்
நேரிய காந்தியும்
சூரிய காந்தியும்
மெல்லிடை பெண்டிரும்
மென் பொருளும்
மணக்கும் தேயிலையும்
மயக்கும் பட்டும்
கொட்டை பாக்கும்
நெட்டை தேக்கும்
பரந்த பண்பாடும்
பலரது பண் பாடும் !!
அறிவாரா அவனியோர்
அதனூடே நம் நாட்டின்
அனேக முரண்பாடும் ?
பார்க்கவொண்ணா அதனை
பார்க்குமாகின் மானுடம்
பாரதத்தின் பிற பெருமையை
பாராட்டிப் பாரா !!
அதைத் தான் இப்புத்தகம்
அடிக்கொருதரம் சுட்டுகிறது
பாராவுக்கு பாரா !!
Labels: arvind adiga, booker prize, shameful indian politics, the white tiger
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home