பகலினில் ஆட்டம். . .
ஆஹா!
அலர் கதிர் ஞாயிறை
கைக்குடை காத்தது !!
அவனியோர் முகத்தில்
அழகு முறுவல் பூத்தது !!
குமுறலில் கொதிக்கிறது ஓரணி !!
குழம்பியோர் கூட்டுகின்றார் பேரணி !!
மட்டை உலகில் அதற்கிருந்தது
மகத்தான ராஜ்ஜியம் !!
மாற்றியிருக்கிறது அதனை
இரண்டுக்கு – பூஜ்யம் !!
வெற்றிக் களிப்பில்
வெடிகள் எட்டுகிறது வானை !!
கிரிக்கெட் உலகம்
போற்றுகிறது இந்துஸ்தானை !!
மித மிஞ்சிய களிப்பில் அதனை
மிடுக்காக உட்கார்த்தியிருக்கிறது
மொகாலி - நாக்பூர் !!
தோற்றார் குமுறலில்
தெரிகிறது நாக்கூர் !!
உலகெங்கும் செய்தித்தாள்கள்
உன்னதமான இந்திய கெலிப்பை
உவந்து போற்றுகின்றன !!
ஆஸி அணியை
“அதிர்ஷ்டம் அடுத்தமுறை” என
அடிக்கொருதரம் தேற்றுகின்றன !!
இருப்பினும்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
இன்ன பிற ஏடுகள்
குற்றமொன்றை சாற்றுகின்றன !!
குன்றளவு கோபத்தை ஏற்றுகின்றன !!
குற்றச்சாட்டின் ஆதாரம்
கடைசிப் போட்டியின்
மூன்றாம் நாள் ஆட்டம் !!
அதை நினைத்தே
ஆஸியினர் முகத்திலும்
அளப்பொண்ணா காட்டம் !!
ஆஸியணியினரால் அந்நாள்
கூடி முயன்றும்
கூட்ட முடியவில்லை ஒட்டங்களை !
கூட்டுகின்றார் அதனாலின்று
கூவிக் கூவிக் கூட்டங்களை !!
மாற்றணியின் ஓட்டத்தை தடுக்க
மாளாத் துயரத்தை கொடுக்க
அன்று தோனி
அமைத்தார் களம்
எட்டுக்கு ஒன்றாக !!
சர சரவென ஆஸியணியில்
சரிந்தன விக்கெட்டுகள்
ஒன்றன் பின் ஒன்றாக !!
இதன் நடுவே போட்டியும்
இரண்டு நாட்களுக்குப் பின்
இந்தியாவுக்கு என்றாக..
பண்டிதர் என
பறைசாற்றும் பலருக்கு
படவில்லை அது நன்றாக !!
எதிர்வரும் பிரச்சினையை
எதிர்நோக்கவும்...
எதிராளியை
எளிதாய் நீக்கவும்....
எதையும் செய்வீரோ நீர்
வெற்றி ஏற்றிட ?
எமக்குத் தோன்றவில்லை
உம்மை போற்றிட !!
இருக்கலாம் இப்போட்டி
யுத்தமாக...
இருப்பினும் இருக்க வேண்டும்
ஆட்டம் சுத்தமாக....
எனச் சாற்றுகின்றார் !!
எளிதில் போகா சோகத்தை
எதை எதையோ சொல்லி
ஆற்றுகின்றார் !!
ஆஸி அணியே !! - அவர்தம்
ஆதரவாளர்களே !!
ஏமாற்றத்தில் ஏன் குமைகிறீர் ?
பார்ப்பாருக்கு ஏன்
பரிதாபமாக அமைகிறீர் ?!
என்ன பிரயோசனம்
எம்மைக் குற்றம் சொல்லி ?
ஈதன்றோ செய்தார் ஆதிநாளில்
உங்களுர் லில்லி ?
Labels: 2-0 win, 8-1 field, border gavaskar trophy, dennis lillee, dhoni, india vs aus
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home