Friday, February 20, 2009

இரு கண் இடுக்கண். . . .

2009022058060101
Picture Source: The Hindu

அனைத்து மக்களையும்
அற வழியில்
அரவணைக்க வேண்டும்
அரசின் இரு சட்டைகள் !!
காவல், நீதி என
அவற்றிற்கு உண்டு
அடையாள அட்டைகள் !!

அடித்துக் கொள்கின்றன
அவை இங்கு !!
அறம் செத்ததோ என
அடியேன் அவதரித்த மண்ணில்
அனைத்து திசைகளிலும் சங்கு !!

எடுத்த கையிலிருக்கும்
எடைத் தராசு...

எவர் சரி
எவர் தவறென...

”எப்பொருள் கேட்பினும்
மெய்ப்பொருள் கேளும் வரை “

எப்பக்கமும்...
எள்ளளவும்...

என்றும் தாழலாகாதெனும்
ஏரார்ந்த சிந்தனையில்...

”சட்டத்தின் முன்
சமம் எல்லோருமென”

இருக்கிறாள்
இன்னமும் ஒரு பெண்
இரு கண் கட்டி !!

இத் தருமத்தை
இறுதி செய்ய வேண்டிய
இரு பெரும் குழுவினருள்
இன்று நடந்த
இழி செயலால்

இரத்தமாய் அவளது
இரு கண்ணிலும் கட்டி !!

இலங்கையில் இறக்கலாம்
இனத்தார் ரத்தம் !!
இதற்காக இங்கேன்
இன்னொரு யுத்தம் ?

காப்பாற்றுக கதியற்றோரை என
காவல்துறையை நீதித்துறையை நாட்டினால்.....

வாதிட வேண்டியோர்
வசை பாடி மோதிடுவதை...
கள்வரை பிடிப்பாரை
கண்டபடி சாடிடுவதை..
கருத்தாகப் பணியாற்றும்
கட்டிடத்துக்கே தீயிடுவதை....

கண்டு சகிக்கமுடியவில்லை
கறவைக்கு நீதி வழங்கிய
கண்கவர் நாட்டினால் !!

யாருக்கு தேவை
” நெஞ்சுக்கு நீதி ” ?
ஆட்சியிலிருக்கும் ஓட்டையடைக்க
ஆள்வார்க்கில்லையே நாதி !!

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home