Wednesday, December 24, 2008

என்னை பாதித்தவர்கள். . . .

சங்கீதம் எனில்.... – 01

தனக்கே உரிய அதிகாரத்தில்
133 அதிகாரத்தில்

வையம் சிறக்க
வைத்தான் வள்ளுவன்
அரும்பெரும் கருத்துக்களை
அழகிய குறளாக !
சிந்தனையை சிறப்பித்து
சீர்செய்யுமவை திரளாக !!

எது எவர்க்கு
எப்போது முக்கியமென
எங்கும் வைத்தான் கேள்வி !!
”கேள்வி” என்றோர் அதிகாரமும்
வைத்ததாய் கேள்வி !!

”செல்வத்துள் செல்வம்
செவிச் செல்வம்”
”செவிக்கு உணவில்லையெனில்
சிறிது வயிற்றுக்கு” என

அதனில் முன்னிறுத்தினான் அறிவதை !!
அவயம் அதன்றி சிறப்பிக்குமோ
அறிவதை ?!

இவ்விரு உறுப்பு
இன்பமுறுதல் தன் பொறுப்பென...
இன்றளவும் ஒரு மண்
இருந்து வருகிறது !!
இசையையும் பசையையும்
இயைந்து தருகிறது !!

அதன் திசையெங்கும் நஞ்சை !!
அதுவே தஞ்சை !!
அள்ளும் நெஞ்சை !!

ஒப்பு இல்லா
தஞ்சை சில்லாவில்

வயலிடை நாற்று
சோபிக்காததாய்..
வாய் புகுந்த காற்று
வியாபிக்காததாய்...

வரலாறு கிடையாது !!
வசையொழிய பாதுகாக்கிறது
வையத்துள் தன் புகழை
வைகலும் உடையாது !!

அதன் ஆளுமையின் கீழ்
அமைந்தவற்றுள்
அழகான ஒன்றே

மஹாராஜபுரம் எனும்
ஊரென்பது...
உச்சரித்த உடனே
ஊகிக்க முடியும்
உன்னதமான இக் கவிதையின்
உட்கரு யாரென்பது !!

-- தொடரும்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home