Wednesday, December 31, 2008

சங்கீதம் எனில்.... – 02

ஆதி தாளமும்...ஆதி காலமும்

அன்றிலிருந்து இன்று வரை
அதிரும் சங்கீத உலகம்
அப்பெயர் கேட்டால்...
அவ்வாறு அனுதினம்
அதன் பெருமையை
அறிய வைத்தார் ஒருவர்
அவர் தம் பாட்டால் !!

அவரது திறனை
அளக்கு முன். . .
அவர் பங்கினை
விளக்கு முன். . .

ஆராய வேண்டும்
ஆதி நாள் இசையுலகின்
ஆரம்பக் கால பாதையை !!
அதுவே காட்டும்
அழகுற அம் மேதையை !!

தனித்த சிலரால் பேணப்பட்டு..
தட்டுச் சில்லறையோடும்
தேங்காய் சில்லோடும் காணப்பட்டு..

அந்நாளில்
அனேக பாடகர்கள்
அரும்பெரும் அவதியுற்றார் !!
அளவிலா அசதியுற்றார் !!

ஏகமாய் இசையறிந்த
ஏனைய சிலரோ

ஏக தாளம்
அடதாளம்
சுருதி பேதம் என
விந்தை புரிந்திட..
வியந்தார் பலர்
விரிவாக அதனை புரிந்திட !!

மக்கள் வந்தார் கச்சேரிக்கு
மழைக்கு ஒதுங்குவது போல்..
பாடல் இருந்தது
பார்ப்பார் விழி பிதுங்குவது போல்.

பாடகர் இருப்பார் மேடையில்
பாடிய அடியை
திரும்பத் திரும்ப பாடி !!
பாமரர் இருப்பார்
பாட்டைச் சாடி !!

கோண முகத்தைக் காட்டி...
கையைக் காலை ஆட்டி..

பெரும் வேகத்தில்
அரும் பதங்களை
போதும் மென்று..
பத்தாம்பசலிகளுக்கு அது
போதுமென்று...

பாடிடுவார் பாடகர்
பாடல் பொருள் மாறிட
பல வார்த்தையை உடைத்து !
பாட்டை அர்த்தமின்றிப் படைத்து !

பலரிடம் இருக்கும்
பலத்த சேட்டை....
மக்கள் முழுதும்
மறந்து விடுவார்
மகத்துவமிக்க பாட்டை..

சாமானியனும்
சங்கீதத்தை திரும்பிப் பார்க்க..
சத்தமின்றி அவனிடத்தே
சங்கதியை கொண்டு சேர்க்க..

பாடற் கலையுயர…
பாடுவார் கேட்கும் விலையுயர..
நாடுவார் நிலையுயர...

ஒருவரும் முயலவில்லை !!
முயன்றாரால் இயலவில்லை !!

--தொடரும்

Labels: , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home