Monday, January 12, 2009

சத்தியமே லட்சியமாய். . .

ramalinga-raju

நிறுவனம் ஒன்றின்
நிதி நிலையை
நிதர்சனமாய் அறிய....
நிர்வகிப்பாரது
நிர்வாகத் திறன்
நிலத்தார்க்கு தெரிய....

பங்குதாரர்களும்
பங்கீட்டாளர்களும்

காலையில் எழுந்தவுடன்
வாசலில் செய்தித்தாள் விழுந்தவுடன்

அதி விரைவாய் படிப்பர்
அக் குழுமத்தின்
அன்றாட கணக்கினை !!
அக்கு வேறு
ஆணி வேறாக
ஆராய்வர் பலர்
அதில் தெரியும் பிணக்கினை !!

தெள்ளத் தெளிவாய்
தெரிய வேண்டுமதில் நேர்மை !!
தொழுமாறு செய்ய வேண்டும்
தொழில் செய்வாரது கூர்மை !!

உள்ளவை உயர்ந்தவையா என
உற்று நோக்கும் உலகில்

உண்மை என்பது ஒருவன்
உத்தமனா உதவாக்கரையா என்று
உரசிப் பார்க்கும் உரைகல் !!
உளத்தில் அதனை
உட்கார்த்தாது
உள் நாக்கை மடித்து
உரக்கப் பேசிடில்
உன்னதமாகுமா உரைகள் ?

இந்தியாவை மேம்படுத்த...
இண்டு இடுக்குகள் எங்கும்
இரு கணினி பொருத்த....

இருக்கலாம்
இறவா எண்ணம் !!
இருப்பினும்
இருக்கும் நாள் வரை
இருக்க வேண்டும்
இவ்வுலகோர் நம்மை
மறவா வண்ணம் !!

பங்குச் சந்தையில்
பங்கு புகழ்க் கொடி நாட்ட....
இல்லாத பணத்தை
இருக்கின்றதென காட்ட.....

ஆட்டுவிக்கிறது நிதி !!
ஆடுகிறான் அதனால்
ஆளும் பிரதிநிதி !!

அமெரிக்காவில்
அன்று Enron !!
இராமலிங்க ராஜு
இன்று
இந்தியாவில் ”பின்றான்” !!

எழுதும் போதே
எனக்கு எங்கோ இடிக்கிறது !!
இனி உலகம்
இந்தியர் கையிலென
இயம்பியோர் இரு கண்ணும்
இரத்தக் கண்ணீர் வடிக்கிறது !!

மதி நிறைந்தோரே !
மறந்தீரே தங்களது பங்கை !!
உலகோர் வாங்குவாரா இனி
உன்னதமான தங்களது பங்கை ?!

சத்யம் எனும் குழுமத்தில்
சத்தியம் இல்லை !!
நயத்தகு உலகத்தார்
நம்புவரோ இனி
நம்மவரது சொல்லை ?!

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home