Monday, December 15, 2008

Outsourced. . . .

outsourced_ver2

இன்று முதல்
இங்கில்லை உனக்கு வேலை !!
இன்றே வை
இந்தியாவில் காலை !!

அனுதினம்
அமெரிக்கர் தேவைகளை
அங்கிருந்தவாறே அறிந்து
அலுவல் புரிவர்
அந்நாட்டு மக்கள் இனி !!

அதிகம் அவர்கள்
அல்லலுறாது
அலுவல் கற்பித்து
அவர்கட்கு நீ இனி !!

இப்படிச் சொல்லப்பட்ட
இளைஞன் ஒருவன்
இந்தியா செல்கின்றான்

இப் பணி
இந்தியர்களால் முடியாது
எனும் மறுப்போடு !!
வேண்டா வெறுப்போடு !!

வந்த இடம் அவனுக்கு
வாழக் கைத்ததா ? – தலை
தாழ வைத்ததா ?

இதுவே “Outsourced”
திரைப் படம் !!
கதையின் களம்
இந்திய வரை படம் !!

”ஏழ்மையிலும் நேர்மை
கோபத்திலும் பொறுமை
தோல்வியிலும் விடாமுயற்சி
வறுமையிலும் பரோபகாரம்
துன்பத்திலும் தைரியம்
பதவியிலும் பணிவு ”

என் எழுத்தல்ல இவை !!
எனினும்
என்றும் போற்றத்தக்கது அவை !!

வாழ்க்கைக்கு விழிகளாக..
வாழ்வில் வெற்றிக்கு வழிகளாக...

இக் கோட்பாடுகளை
இந்தோ-பர்மா எழுத்துப் புத்தகத்தின்
பின் அட்டையினின்று

முறையே நான்
முன்னம் படித்ததுண்டு !!
முன்னேற்றத்தை முன்நிறுத்தி
முக்கியமான சில நேரங்களில்
முதற்கண் அவற்றை
முனைந்து கடைப் பிடித்ததுண்டு !!

இன்றளவும்
இவைதான் என்னளவில்
இந்தியரை தனித்து காட்டுகின்றன !
இமாலய வெற்றியை
இமைப்பொழுதும் அவர்க்கு கூட்டுகின்றன !!

அவை அத்துணையும்
இப்படம் கோடிடும் !!
இதற்காகவேணும் இன்றே
இரவல் தருவாரை
இப்படத்திற்கு நீவிர் நாடிடும் !!

ஒவ்வொருவரையும்
ஒவ்வொரு வகையில்
ஒருவாறு இப்படம் கவரும் !!
பிடிக்கவில்லை என
பிதற்ற மாட்டார் எவரும் !!

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home