மும்பை மேரி ஜான். . . .
ஓடி ஆடி
ஓய்ந்து
ஓய்வினை நெருங்கும்
ஓர் காவல்காரர் ...
தந்தையாகவிருக்கும்
தகவு மிக்க
தனியார் துறை கணினியாளர் ...
தெருவோரம் தேநீர்
தினம் விற்று உழைப்பவர்...
சிறு வேலை செய்து
சிறிது சிறிதாக பிழைப்பவர்..
இதர நேரங்களில்
இந்து-முஸ்லிம் என
வம்புச் சண்டையை அழைப்பவர் ..
எங்கு எது
எப்படி நடக்கிறது
என நவிலும் செய்தியாளர்....
அவ் ஐவரின்றி
அனைவரையும் உலுக்குகிறது
அவரவர் வழியிலேயே
அவரறியாது
அசம்பாவிதம் ஒன்று !!
நம் நாட்டில்
நடந்தது அது
7/11/2006 அன்று !!
அதனை மும்பை
அணுவளவும் மறக்கவில்லை !!
அதன் துயரை
அகஸ்மாத்தாகவும் துறக்கவில்லை !!
நடந்ததை நடந்தவாறு
செய்திச் சுருளாய் காட்டாது..
களேபரமான காட்சிகளை
கதறக் கதற தீட்டாது...
கற்பனை சில அவ்வப்போது
கதையில் சேர்த்து....
கருவினின்று கதை
கணமும் பிறழாது பார்த்து...
உண்மைகள் ஊரறிய...
உள் வலி
உலகுக்கு தெரிய...
குறிப்பாய் எவரையும்
குத்துவதை தடுத்து....
குறுக்கு வழியில்
குற்றத்தை களையும்
குதர்க்க உரை விடுத்து ...
நிறைய வசனமற்று
நிகழ்வின் தாக்கத்தை....
நினைவிழந்து தவிக்கும்
நிலத்தார் ஏக்கத்தை.....
செல்லுலாய்டில்
செவ்வனே
செதுக்கி இருக்கிறார்
”மும்பை மேரி ஜான்” என்று !!
பார்த்தால் சொல்வீர்
பார்த்த மாத்திரத்தில்
தமிழ்ப்படம்
தரத்தில் சாண் என்று !!
கண்ணில் நீர்
கரை புரண்டு ஓடும்
காட்சிக்கு காட்சி !!
நம் தேசத்துக்கு
நல்லதொன்று நடக்காதோ என
நம்மை உலுக்கும் மனசாட்சி !!
இயல்பு வாழ்க்கை
இரத்த வெறியாய் போனால்..
இருக்கும் பொழுதெல்லாம்
இம்சையாக ஆனால்...
இரயிலில்
இறங்குவதற்கு முன் உள்ள
இருபது நிமிடப் பயணமும்..
இடையே நிலவும்
இரண்டு நிமிட மெளனமும்...
இரு யுகமாய் நீளும் !!
இருண்டு போகும் நாளும் !!
”ஆண்டவன் சொல்றான்...அருணாச்சலம் செய்யறான்
எப்படியிருந்த நான்...எப்படி ஆயிட்டேன்
மாப்பு...வைச்சுட்டாண்டா ஆப்பு
நான் போலீஸ் இல்லடா...பொறுக்கி
என் வழி..தனி வழி...
தமிழில் எனக்கு பிடிக்காதது...மன்னிப்பு “
தமிழ்ப் படம் இன்னமும்
Talkie யாகவே இருக்கிறது !!
Movie யாக மறுக்கிறது !!
Labels: irfan khan, KK Menon, Madhavan, mumbai meri jaan, paresh rawal, punch dialogue, soha ali khan, talkie vs movie, tamil movies
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home