Tuesday, June 30, 2009

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து. . .

madoff

கைப்பொருள்
கையாடின பொருளானால்
கைவிலங்கு கிட்டும்
கைக்கும் !!
சிறகொடிந்த வாழ்க்கையாகி
சிறுகச் சிறுக
சிறை வாழ்வு கைக்கும் !!

திரவியம் பெருக்க
திரளாய் தேவை உழைப்பு !!
வெற்றிக்கு அதுவன்றி இல்லை
வேறோர் அழைப்பு !!

Robbing Peter & Paying Paul
என சரித்திரம் படைத்தால்.....
கடைத் தேங்காயை
வழிப் பிள்ளையாருக்கு உடைத்தால்....

காராக்கிருகம் போவீர்
கம்பி எண்ண !
மறவாதீர் அதனை
மனதார எண்ண !!

பெரும் லாபம் எனும்
பெரும் தாபத்தில்
பெரும்பான்மையினர் வாழ்கின்றார் !!
போட்ட பொருள்
போய் விட்டதெனில்
போதும் பெருந்துயரில் ஆழ்கின்றார் !!

பரவலாக பலதரப்பட்ட மக்களை
பலவாறு வாட்டுகின்றது
பணத் தட்டுப்பாடு !!
அடிப்படைக் காரணம்
அவர் மறந்த
மனக் கட்டுப்பாடு !!

மானுடமே !!
கடனின்றி வாழப் பழகு !!
கணமும் அதுவே அழகு !!

If you are better off...
You don’t need Madoff !!

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home