Tuesday, April 07, 2009

யாமறிந்த மொழிகளிலே - இறுதிப் பகுதி

பெருமையுடையோரே !
பெருந்தகையோரே !!

Simple Harmonic Motion ம்
Single Optic Lever ம்

Femur ம்
Fissure ம்

Trapezium ம்
Tetrahedron ம்

ஆங்கிலத்திலேயே அமையட்டும் !!
அவற்றை படித்திட
அளப்பொண்ணா புகழ்
அதிகம் உமையெட்டும் !!

பிற மொழியையோ
பிற மொழி வழி
பிறவற்றையோ
பிழையின்றி பயிலுங்கள் !!

பிறகேனும்
பிறந்த மண்ணில்
பிறங்கும் மொழியையும்

”பிறகு” என்றெண்ணாது
பிரதானமாய் பயிலுங்கள் !!

எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து

எவர்க்கோ உழைத்து
எப்படியோ பிழைத்து

அறுபது வயதில்
அசதியுற்று அடங்குங்கால்
அமைதியை தேடும் மனம் !!
சிந்தியுங்கள் அந்நிலையை
சற்றே ஓர் கணம் !!

செந்தமிழா?
சேக்ஸ்பியரா?

“Miles to go before I sleep” ஆ ?
மயக்கமா? கலக்கமாவா?

எதைப் படிப்பீர் அப்போது ?
தமிழே துணையென்பார்
தகவாய் அதனை
தக்க சமயத்தில் படித்தால்
தப்பேது ?

மண்ணின் மொழியோ
மாற்று மொழியோ

நேற்று வந்த
வேற்று மொழியோ

உயர் தமிழ் பயில்வது
உரிமை சார்ந்தது அல்ல !
உணர்வு சார்ந்தது !!
வேறென்ன சொல்ல !!

இயல்பு வாழ்க்கையில்
இனியாவது
இனிய தமிழில் பேசுவதென
இன்றே ஒரு முடிவு எடுங்கள் !!
இத்துணை நாள் மறந்த
இன்றியமையா மரியாதையை
இன்றே தமிழுக்கு கொடுங்கள் !!

-- முற்றும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home