தந்தை மகற்காற்று நன்றி. . .
வாங்கலாம் பைசாவால்
வாக்காளர் ஓட்டை !!
கேட்கலாம் நீவிர்
கேள்விக் கணைகளால்
கேட்பாரற்றார் கேட்டை !!
அந்தியும் உம் கவனம்
அரசாளுவார் கோட்டை !!
அந்தோ!
அடித்தானே உம் மகன்
+2 வில் கோட்டை !!
எவர்க்குத் தேவை உமது
எகத்தாளமான ஆட்டம் ?!
போதும் குடும்பமாக
போங்கள் இனியாகிலும்
வள்ளுவர் கோட்டம் !!
எழுதியிருக்கிறது அங்கு
எந்தை வள்ளுவனின்
எண்ணற்ற வாக்கு !!
என்றும் உமக்கு நல்குமவை
எழில் நோக்கு !!
உமது குடும்பத்து
உறுப்பினர் அனைவருக்கும்
உரக்கச் சொல்லியிருக்கிறான்
உயர்ந்த கருத்தை எந்தை !!
உமக்கேன் இல்லை
உவந்ததை படிக்கும் சிந்தை ?!
" மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. "
நீவிர் “கேப்டன்” என்பதால்
நாட்டிற்கென்ன லாபம் ?!
வீட்டில் உம் மகன்
வெறும் “12th man” - அந்தோ பாபம் !!
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home