”சாக்கலேட்” கிருஷ்ணா...
- "Chocolate" Krishna - backstage with Mr. Crazy Mohan
”இடுக்கண் வருங்கால் நகுதல்”
இல்லை அதன்றி
இன்பம் மிகுதல் !!
அதுவாக அண்டும்
அவலத்தை ஓட்டிட..
அவ்வப்போது காட்டிட...
வையத்தார்க்கு
வைத்தது இயற்கை
வரிசையாய் 32 பல்லை !!
சிரிப்பில்லா மாந்தர்க்கு
சிறப்பு இல்லை !!
அவனி அனுதினம்
அவதியுறுகிறது
அலைபாயும் மனச் சிரங்கில் !!
அணுவளவேனும் அதனை
அடக்க வேண்டும் நாடக அரங்கில்...
என...
மானுடம் சிரிக்க...
புன்னகை தரிக்க...
நாற்பதாண்டு காலமாக
நாடகம் மூலமாக
ஏற்றார் ஒருவர்
ஏகாந்த பொறுப்பை !!
சொல்லி மாளாது
“கிரேசி கிரியேஷன்ஸ்” சிறப்பை !!
வெண்ணையுண்ட மாதவன்
மண்ணுக்கு வந்தால் ??
வேண்டும் வரத்தை
“மாதுவுக்கு” தந்தால்??
என..
- "Chocolate" Krishna - backstage with Shri. Neelu
ஒரு வரியில்
ஒரு கதை !!
ஒன்றரை மணி நேரம்
ஒன்ற வைக்கிறார்
மனம் அதை !!
உலகில் இன்று
ஓராயிரம் திரைப்படம்
பார்ப்பார் முகம் சுளிக்க !!
உண்டா ஒன்றேனும்
உருப்படியாக குடும்பத்தோடு
உவந்து களிக்க?
இது போன்ற நாடகங்கள்
இக்குறையை தீர்க்கின்றன !!
இறவாப் புகழை
கிரேசிக்கு சேர்க்கின்றன !!
பொதுவாகவே
மேடை நாடகத்தின்
மீதெனக்கு
மாளாப் பற்று !!
இதற்காகவே
இறங்கிய நாளன்றே
இறக்கி வைத்தேன்
சிரமத்தை சற்று !!
ஆறு மணியளவில்
ராணி சீதை அரங்கில்
அடைந்தேன் !!
அளவொண்ணா ஆனந்தம்
அடைந்தேன் !!
Labels: chocolate krishna, crazy mohan, maadhu and others., neelu
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home