பண்...இசை...பத்மஸ்ரீ - 05
Picture Courtesy: Hindu Images
அப்போது சிலுப்பினான்
ஒரு தமிழன் முதுகை !
ஆஹா! அவ் இன்பத்தை
எழுத எனக்கேது
எதுகை ?!
தட்டினார் அவர்
தனது தவிலை !!
அது தந்த இன்பமோ
அளவிலை !!
தவில் துணையோடு வரும்
நாதசுரம்
கேட்கத் தொடங்கியது
நகரப் புறம்..
பத்து கையால்
அவர் கொட்டுகையால் !!
கொட்டுகையில் நாதம்
தேனாய் கொட்டுகையால் !!
சுப்பிரமணியம் எனும் அவர்
பிறந்த ஊர்
வலையப்பட்டி !
தவிலில் அவர்
படு கெட்டி !!
திறந்த வாய் மூடாமல்
கேட்டது பட்டி தொட்டி !!
வலையப்பட்டி பிடித்த
வார்
மத்தளத்தை இழுத்தது
மத்தத்திலிருந்து !!
துயிலெழுந்தது தமிழிசை
அதன்
சத்தத்திலிருந்து !!
பிற இசையை
பின்னுக்கு தள்ளினார் மக்கள்
சித்தத்திலிருந்து !!
மீட்டார் அவர்களை
மேற்கத்திய வடக்கத்திய இசையின்
பித்தத்திலிருந்து !!
-- தொடரும்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home