Friday, March 02, 2007

பண்...இசை...பத்மஸ்ரீ - 03

Kavingar Vali
Picture Courtesy: The Hindu Images

நார்த்தை அவரது
வார்த்தை
முதலில் தெரியாது
நலம்
செரித்ததும் தெரியும்
பலம்

சொற்றொடரில் இருக்கும்
சுகம்
ஆராய்ந்தால் அறியலாம்
அதன் பல
முகம்

ஒன்றா? இரண்டா?
திரையுலகில் ஏறத்தாழ
47 ஆண்டுகள்
தாக்குப் பிடிப்பாரோ
இத்தனை நாள்
இற்றை நாள்
வாண்டுகள் ?

10000 பாடல்கள்
பற்பல பட்டங்கள்
என
கோலோச்சியும்

திரை இசை
குறை இசை
இறை இசை
நிறை இசை

என காலப்போக்கில்
நினைந்து
பஞ்சனைய எளிமையோடு
காவியப் பனுவல்களும்
புனைந்து

இன்றளவும் தொடர்கின்றார்
பணி !!
தமிழுக்கு இவர்
தேடித் தந்த புகழுக்கு
தமிழா! இவரை நீ
பணி !!

ஆஹா!
எத்தனை எத்தனை
சிந்தனை?
அவற்றில் இழந்திருக்கிறேன்
எந்தனை !
தந்திருக்கிறேன் கண்ணீரால்
வந்தனை !!

படித்திருக்கிறேன் அத்தனையும் !!
மயக்கும் அவை எச்
சித்தனையும் !!

திரைத் துறையில்
பிதாமகர்
திருப்பராய்த்துறையில் பிறந்த இத்
திருமகர் !
வளர்ந்ததோ ஸ்ரீரங்கம் எனும்
திரு நகர் !!

வெண் தாடி
முகர் !!
யாரே இவர்க்கு
நிகர் ?

ரங்கராஜன் (எ)
கவிஞர் வாலி
இப் பெருமைக்குரிய
பாக்கியசாலி !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home