Monday, March 12, 2007

பண்...இசை...பத்மஸ்ரீ - 04

வாலி - என்
மானசீக குரு !
நான் தினம்
தொழும் உரு !!
தமிழுக்கு கிடைத்த
கற்பகத் தரு !!

என்னளவில் வாலி
பதின்மூன்றாவது ஆழ்வார் !!
என் பேச்சுக்கு
மறுப்பில்லை என்பார்
வாலியில் ஆழ்வார் !!

சொல்கிறேன் இப்போது
இரண்டாவது செய்தி
கேட்ட பின் நிற்பீர்
வியப்பு எய்தி !!

முன் காலத்தில்
தமிழன்றி
தமிழிசைக்கும்
வந்தது ஒரு
கட்டம் !!
அது அத்தகைய
கால கட்டம் !!

தமிழர்
திருமணமோ
திருநாளோ
தொடங்குவது
மங்கள இசையில் !!
மத்தள இசையின்றி அவ்
இசை இல் !!

மேற்கத்திய கலாச்சாரம்
தமிழர் வாழ்வை
மெல்ல அரித்தது !
தமிழ் வாத்தியங்கள்
தமிழர்க்கே கரித்தது !!

இந் நிலையில்
நம் வாத்தியம்
பிழைத்தல் எங்ஙனம்
சாத்தியம்?

உடுக்கை
தமுக்கு
தாரம்
தம்பட்டம்
முரசு
பறை
பம்பை
நகரா
பேரிகை என
நம்மவருடையது
பலவகைப்பட்ட தோற்
கருவிகள் !!
தட்டினாலே வரும்
லய அருவிகள் !!

இவைக்கு வருமோ
இனி கேடு ?!
தபலா, டோலக்கு
என போய்விடுமோ
தமிழ் நாடு?

திராவிடர் வாத்தியம்
ஒவ்வொன்றும் இனியவை !
இருக்குமா இனி யவை?

காணுமோ வசை?
இருக்குமா அவை
இனி மண்மிசை?

என பல வாரியாக
எழுந்தது ஒரு
கவலை !!
ஊர் வாய்
விட்டு வைக்குமா
தானே வந்த
அவலை?

-- தொடரும்

1 Comments:

At 3/12/2007 10:51 PM , Anonymous Anonymous said...

Awesome ...

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home