நான்....கடவுள்
ஆதாம் ஏவாள்
ஆதியில் சுவைத்த கனி !!
”ஒரு நாளைக்கு ஒன்றெனில்
ஓவாப் பிணியும்
ஓடிடும் இனி ” !!
கனி உலகோ
கணினி உலகோ
“ஆப்பிள்” இன்று
ஆங்கே அதிகம் பேசப்படுகின்றது !!
அதிகமானோர் பார்வை
அதன் மீது வீசப்படுகின்றது !!
”ஜன்னல்” எனப் பெயரிட்டும்
மூலச் செயலியின்
மூலத்தை
மூடி வைத்தார்
மூடர் ”கேட்ஸ்” எனும்
Dosன் Dad !!
Windowsன் பிடியை
“Bundled Software”ன் கொடியை
தர்க்கத்திற்கு இடமின்றி
தகர்த்திருக்கிறது
Jobs ன் Ipad !!
மேம்பாட்டுக்காக படிப்பவர்
மேம்போக்காக படிப்பவர் என
வரிசைப் படுத்தலாம்
வலைத் தளம் வாசிப்பாரை !!
அவற்றிற்கு வர
அவர் அனைவருக்கும்
வல்லான் நான் வகுத்த
வழி ஒன்றே என்பது
வழுக்கும் பாசிப் பாறை !!
“Market Segmentation” என்பது
மகோன்னதமான ஒன்று !!
மகானுபாவர் Bill Gates ன்
மதியதனை உணரின் நன்று !!
எல்லாப் பொருளும்
எல்லோருக்கும்
எல்லா வழியிலும்
எப்போதும் பொருந்துவதில்லை !!
வாடிக்கையாளர் தம்
வகை அறிவோர்
வழி மறந்து
வருந்துவதில்லை !!
வகைக்கொன்றாய்
வலைத் தளம்
வளர்ந்து வருகையில்
உலகம் ”விரல் நுனியில்” என
உவந்தார் பலர் !
உணர்ந்தாரா அவ்வார்த்தையின்
உள் அர்த்தத்தை
உலகில் ஒரு சிலர் ?
காலம் காலமாய்
கனத்தன பெருஞ்சுமையாய்
கணினிகள் பெருவாரியாய் !!
அவற்றை தூக்கிட
அரும்பியது வியர்வை
அனேகர்க்கு மாரியாய் !!
Mouse, KeyBoard என
மூட்டை முடிச்சுகள் கூடின !!
வடங்களின் சந்தடியில் வீட்டின்
இடங்கள் நிரம்பிட
மனையாள் பலர் முகம்
மலர்ச்சியின்றி வாடின !!
நார்த்தையை எடுத்து
நாவில் வைக்கும் விரலால்
உண்மையான விரல் நுனியில்
உலகம் Ipadல் விரிகிறது !!
நற நறக்க வைத்து
நம்மைக் கட்டுண்ட விலங்குகள்
நிதம் ஒன்றாய் முறிகிறது !!
Creativity, Intuition, Genius
அதற்கான அர்த்தத்தை
அடுத்து வரும் சந்ததி
அகராதியில் புரட்டினால்
Steve Jobs என படிப்பர் !!
ஏனையோர் அன்றும்
This program performed an illegal operation and will be shut down என
வாசகம் பார்த்தே
வாழ் நாளெல்லாம் துடிப்பர் !!
Labels: apple, creativity, genius, intuition, iPad, market segmentation, Recreational Browser Vs Informational Browser, steve jobs
1 Comments:
nice blog
visit my blog
tamil web library
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home